என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது
    X

    வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு: வாலிபர் கைது

    வேதாரண்யம் அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி வடக்கு கிராமம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவரது மனைவி ராமாயி என்கிற பானுமதி (வயது70). இவர் சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பானுமதி அணிந்திருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

    இதில் பானுமதி சத்தம்கேட்டு பொதுமக்கள் அந்த நபரை துரத்தினர். அப்போது ரோட்டின் குறுக்கே வந்த சுப்பிரமணியன் (53) என்பவரை அந்த நபர் கட்டையால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்ட வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    இதில் அந்த நபர் காரைக்கால் பகுதி கோட்டுச்சேரி வடக்குதெரு, கலியபெருமாள் மகன் செந்தில்குமார் (32) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த சுப்பிரமணியன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து அவரிடமிருந்த நகையை கைப்பற்றி போலீசார் செந்தல்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    Next Story
    ×