என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறையில் ரெயில் மறியலுக்கு திரண்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
    X
    மயிலாடுதுறையில் ரெயில் மறியலுக்கு திரண்டு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

    மயிலாடுதுறையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

    மயிலாடுதுறையில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
    மயிலாடுதுறை:

    கர்நாடகவை கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு, ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன் குமார், பாராளுமன்ற அமைப்பாளர் கதிர்வளவன், மாவட்ட செயலாளர் தேவா, மயிலாடுதுறை நகர செயலாளர் பிரபா, சீர்காழி நகர செயலாளர் தம்பி ராஜதுரை, மாவட்ட அமைப்பாளர் சகுருதீன், இஸ்லாமிய ஜனநாயக மாநில துணை செயலாளர் முஜிபூர் ரகுமான் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×