என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி அடித்துக் கொலை
    X

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி அடித்துக் கொலை

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவி மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் அப்புராஜபுரம் ராஜேந்திர வாய்கால் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்.

    இவரது மகள் தீபிகா (19). இவர் பூம்புகாரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை இறந்து விட்டதால் தாய் சுமதியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தீபிகா செல்போன் பேசிக் கொண்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை.அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்த போது தீபிகாவை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது பெல் அடித்தது. ஆனால் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் அங்குள்ள வாய்க்காலில் தீபிகா செல் கிடந்தது. இதனை அந்த வழியாக வந்த உமையாள்புரத்தை சேர்ந்த ஒருவர் எடுத்து பேசி உள்ளார். பின்னர் அதனை தீபிகாவின் தாய் சுமதியிடம் கொடுத்தார்.

    இதை தொடர்ந்து சுமதி மற்றும் உறவினர்கள் செல்போன் கிடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.அங்கு சற்று தூரத்தில் தீபிகா வாய்க்காலில் தலை குப்புற பிணமாக கிடந்தார்.

    அருகில் மண்வெட்டியின் கைப்பிடி கிடந்தது. அதில் ரத்தக்கறை படிந்து இருந்தது. மேலும் கீர்திகாவின் ஆடைகளும் கிழிந்து இருந்தது. அவரை யாரோ மண் வெட்டி கைப்பிடியால் அடித்து கொன்றது தெரிய வந்தது.இது குறித்து பொறையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கீர்த்திகா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.

    கீர்த்திகாவிடம் இரவு பேசிய நபர் யார்? என்பது குறித்து அவரது செல்போனில் பதிவான எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×