என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • அந்த வழியாக எதிர்திசை சென்ற வாகனங்கள், காவேரிப்பட்டணம் நகர் பிரிவு சாலை வரை சென்று, மீண்டும் வழக்கமான சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.
    • சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் - சேலம் தேசிய நெடுஞ்சா லையின் இருபுறமும் கடந்த சில நாட்களாக, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, சேலம் நோக்கி சென்ற வாகனங்கள், கிருஷ்ணகிரி அணைப்பிரிவு சாலை அருகே எதிர்திசையில் திருப்பி விடப்பட்டது.

    அந்த வழியாக எதிர்திசை சென்ற வாகனங்கள், காவேரிப்பட்டணம் நகர் பிரிவு சாலை வரை சென்று, மீண்டும் வழக்கமான சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.

    இதனால், சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதே போல், கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் அவதானப்பட்டியில் இருந்து காவேரிப்பட்டணம் வரை வாகன நெரிசல் காணப்பட்டது.

    இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை சிக்கியதால், மிகுந்த சிரமத்துடன் சென்றது. கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரியில் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து தொடர்புடைய முன்கூட்டி யே தெரிவிப்பதில்லை.

    இதே போல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல தேவையான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

    நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் ஓசூர், பெங்களூர் மற்றும் சேலம் நோக்கி சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

    • கூலித்தொழிலா–ளியான இவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதால் மிகவும் மனவருத்தத்துடன் காணப்–பட்டார்.
    • அஸ்வத் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கிஷாந்த் தெருவைச் சேர்ந்த–வர் அஸ்வத் (வயது28). கூலித்தொழிலா–ளியான இவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டதால் மிகவும் மனவருத்தத்துடன் காணப்–பட்டார். இந்த நிலையில் அஸ்வத் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தேன்க–னிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவிற்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி மற்றும் நர்சிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ் சாலையில் ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசா லிட்டி மருத்துவமனையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சவுந்தர்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து மருத்துவ மனை ஊழியர்கள், நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் ரஞ்சனா வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக இதய நோய் நிபுணர் டாக்டர் சக்திவேல் வையாபுரி, டாக்டர் உதயசூரியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் டாக்டர்கள் உதயசந்திரிகா, காமிலா, யுவதாரணி, முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி மற்றும் நர்சிங் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 15-ந் தேதி முதல் கலைஞரின் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு பர்கூர் ஊராட்சி ஒன்றியம், மஜித்கொல்ல அள்ளி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    சுதந்திர தின விழாவை யொட்டி, நமது மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்தும், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படு கிறது.

    செப்டம்பர் 15-ந் தேதி முதல் கலைஞரின் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், முதல் அமைச்சர் தலைமையிலான அரசு புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் உயர் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகை பெற்று பெண்கள் தங்களது விருப்பமான கல்வியை கற்று முன்னேற வேண்டும்.

    கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளி இடை நின்றலை தவிர்த்து அனைவரும் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்திட வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கண்ணம் பள்ளி வெங்கட்ரமண சாமி, காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவில், ஓசூர் சந்திர சூடேஸ்வரர், பெரிய முத்தூர் செல்லியம்மன், அகரம் பாலமுருகன், ஊத்தங்கரை காசி விஸ்வ நாதர், அனுமன்தீர்த்தம் அனுமந்தீஸ்வரர் என 8 கோவில்களில் சமபந்தி பொது விருந்து நடை பெற்றது. இதில் காட்டி நாயனப்பள்ளி முருகன் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் சரயு பங்கேற்றார்.

    இதில் உதவி கலெக்டர் பாபு, தோட்டக்கலை துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், பயிற்சி துணை கலெக்டர் தாட்சாயினி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் மகாதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓசூரில் இருந்து மதுரை மாநாட்டிற்கு செல்லும் “வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்” இன்று காலை காவேரிப்பட்டினம் வந்தது.
    • “தொடர் ஓட்டம் ஜோதி” சேலம், திண்டுக்கல் வழியாக வரும் 20-ல் மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    மதுரையில் வரும், 20-ல், அதிமுக சார்பில் பொன் விழா எழுச்சி மாநாடு நடக்கிறது. இதையொட்டி கிருஷ்ண கிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஓசூரில் இருந்து மதுரை மாநாட்டிற்கு செல்லும் "வெற்றி ஜோதி தொடர் ஓட்டம்" இன்று காலை காவேரிப்பட்டினம் வந்தது.

    தொடர் ஓட்ட வெற்றி ஜோதிக்கு" அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக் குமார், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் தலைமையில் வரவேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தமிழ் செல்வம் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவை தலைவர் காத்தவராயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சமரசம், முனி வெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, முன்னாள் எம்பி பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் சங்கீதா கேசவன், ஜெயா ஆஜி, நகர செயலாளர்கள் கேசவன், விமல், முன்னாள் நகர செயலாளர் வாசு தேவன், வழக்கறிஞர் பிரிவு ஜெயக்குமார் மற்றும் அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.

    "தொடர் ஓட்டம் ஜோதி" சேலம், திண்டுக்கல் வழியாக வரும் 20-ல் மதுரை மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி வசம் ஒப்படைக்கப்படுகிறது.

    • வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும்.
    • முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரிகளின் சார்பில் சுதந்திர தி ன விழா கொண்டா டப்பட்டது.

    இதற்கு கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றினார்.

    கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்ப வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம் அனை வரையும வரவேற்றார். நிகழ்ச்சியில் தாளாளர் பெருமாள் பேசுகையில், தாய்மொழி யையும், தாய் நாட்டையும் இரு கண்களாக போற்றி பாதுகாக்க வேண்டும். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக எண்ணற்ற தியாகிகள் தங்களின் உயிரை இழந்து புகழ் சேர்த்துள்ளனர்.

    வன்முறையற்ற பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை அனைவரும் இணைந்து உருவாக்க வேண்டும் என கூறினார்.

    இதில் நிர்வாகஅலுவலர் சுரேஷ், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் நன்றி கூறினார்.

    • 4மாதங்களுக்கு முன்பு கிருத்திகா தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.
    • மன–வேதனை அடைந்த கிருத்திகா சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மருபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் கோனேரிப்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 4மாதங்களுக்கு முன்பு கிருத்திகா தனது வீட்டின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

    இதற்காக அவர் மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு சரிவர குணமாக–வில்லை. இதன்காரணமாக மன–வேதனை அடைந்த கிருத்திகா சம்பவத்தன்று வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
    • விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி சாந்தகுமார், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பார்தீபன், ராமன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மத்தூர்,   

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

    விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் வாசுதேவன் தலைமையில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

    இவ்விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கணேசகுமார், முனுசாமி கவுண்டர், மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணவ சந்தரசு, ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்வின்தாஜ், சலீம், சந்தூர் முரளி, ஊறுகாய் தொழிற்சாலையின் உரிமையாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவினை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடன நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன.

    அதேபோல் முதலிடை பருவத் தேர்வு கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசகுமார் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி சாந்தகுமார், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் பார்தீபன், ராமன் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் உதவியாசிரியர்கள் சின்னதுரை, சின்னராஜ், ரவி, சபாபதி உடற்கல்வி ஆசிரியர் சிவசந்திரன், முருகன், சக்திவேல், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தொழில் கல்வி ஆசிரியர் நன்றி கூறினார்.

    • மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
    • இதனையடுத்து கைப்பந்தாட்ட போட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நாகம் பட்டி கூட்டுச் சாலை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ குரு கல்வி கலைக்கூடம் சார்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆடவர் கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியை குருகலைக் கல்வி கூடத்தின் உரிமையாளர்கள் காத்து வராயன், மாதம்மாள் தம்பதியினர் தலைமை வகித்து தொடக்கி வைத்தனர்.

    இப்போட்டியின் விழா குழுவினர்களான பெருமாள், (பிஏ.பிஎல்), பொன்னுசாமி (எம்.எஸ்ஸி.பிஎட்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கைப்பந்தாட்ட போட்டியை மத்தூர் கலை மகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளார் ராசேந்திரன், பள்ளியின் முதல்வர் சூரியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தொடக்கி வைத்தனர்.

    இதனையடுத்து கைப்பந்தாட்ட போட்டிக்கு 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    இப்போட்டியினை நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு முதலாம் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்று பரிசு ஆகிய மூன்று பரிசுகளையும் ஸ்ரீ குரு கல்வி கலைக் கூட நிர்வாகிகளான அரிமா அண்ணாதுரை, மேகலா ஆகியோர் வழங்கினர்.

    • மத்திகிரி சிப்பாய் பாளையம் அருகில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி காரில் 2 பேர் கடத்தி வந்தனர்.
    • அந்த 2 பேரும் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    கிருஷ்ணகிரி,  

    குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக-தமிழக எல்லை பகுதிகளில் அமைந்துள்ளதால் அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தல் நடைபெறுவதை தடுக்கும் விதமாக மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜா கடை போலீஸ் நிலைய எல்லையில் தாசினாவூர் கிராமத்தில் மர்ம நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் முகேந்திரா ராவ் ஆகியோர் என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர். மேலும் இவ் வழக்கில் வாகனத்தின் உரிமையாளர் பர்கத் என்பவரை தேடி வருகின்றனர்.

    இதேபோன்று ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது மத்திகிரி சிப்பாய் பாளையம் அருகில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி காரில் 2 பேர் கடத்தி வந்தனர். அப்போது அந்த 2 பேரும் காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். உடனே போலீசார் காரை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னா தாஜ், டிரைவர் சையத்சபீர் ஆகியோர் ரேசன் அரசியை கடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாகனத்தின் உரிமையாளர் பிரசன்னா தாஜ் மற்றும் டிரைவர் சையத் சபீர் ஆகியோர்களை தேடி வருகின்றனர்.

    • ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், சமபந்தி விருந்து நடைபெற்றது.
    • ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர்.

    ஓசூர்,

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், சமபந்தி விருந்து நடைபெற்றது.

    இதனை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் உணவருந்தினர்.

    மேலும் இதில், அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் மலைக்கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, ஆய்வாளர் சக்தி, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கோவில் ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது
    • கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், மத்தூர் ஊராட்சியில் 77 -ஆம் ஆண்டு கிராம சபா கூட்டம் பெருமாளப்பன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தியிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கல்வித்துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இக்கூட்டத்தை மக்கள் நலப்பணியாளர் ராஜா ஒருங்கிணைத்து செய்திருந்தார்.கூட்டத்தி ற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் வெங்க டேசன் செய்திருந்தார்.

    ×