என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கலெக்டர் அலுவ லகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள லாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்குகிறார்.

    கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில், 333 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்க பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இணையதள இணைப்பு வழங்கும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம சேவை மையம் அல்லது அரசுக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்ட அறை சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரால் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்திற்கான உபகரணங்களை பாதுகாத்திடவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்திடவும், அறையில் வேறு தேவையற்றப் பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர் அரசு ஆணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளார்.

    இதனால் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் அரசின் உடமைகளாகும்.

    மேற்கண்ட உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் மூலம் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
    • 12 வயதுக்குட்பட்டோர்களுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும். அவர்களுக்கு மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 27-ந் தேதி மாவட்ட இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க தலைவர் டி.மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 27-ந் தேதி (ஞாயி ற்றுக்கிழமை) மாவட்ட இளையோர் தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும். இதில் 20, 18, 16, 14 மற்றும் 12 வயதிற்குட்பட்டோர் என 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறும்.

    20 வயதுக்குட்பட்டோர் 12.11.2003 முதல் 11.11.2005 வரை பிறந்தவராகவும், 18 வயதுக்குட்பட்டோர் 12.11.2007 முதல் 11.11.2009 வரை பிறந்தவராகவும், 16 வயதுக்குட்பட்டோர் 12.11.2009 முதல் 11.11.2011 வரை பிறந்தவராகவும், 12 வயதுக்குட்பட்டோர் 12.11.2011 முதுல் 11.11.2013 வரை பிறந்தவராக இருக்க வேண்டும்.

    இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடை பெறும் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    12 வயதுக்குட்பட்டோர்களுக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மட்டும் நடைபெறும். அவர்களுக்கு மாநில போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒரு வீரர் இரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய கடைசி நாள் வருகிற 22-ந் தேதியாகும். முன்பதிவு படிவங்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    ஒருவர் ஒரு போட்டியில் கலந்து கொள்ள கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறபபட்டுள்ளது.

    • பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர்.
    • எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மிட்டாஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடிபார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று மகனூர் பட்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் அளித்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    • இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிருந்தும், கர்நா டகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது 1,500 ஆண்டுகள் பழமையானசிவன் கோவில் உள்ளது.

    இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கவும், சிறுவர்கள் விளையாடவும் வசதியாக மாநகராட்சி சார்பில் கோவில் அருகே சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இப்பூங்காவிலிருந்து ஓசூர் நகரப் பகுதி மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி வரை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்க வசதியாகக் கண்காணிப்பு கோபுரமும், பைனாகுலரும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், போதிய பராமரிப்பின்றி பூங்கா பாழ்பட்டுள்ளது. பயணிகள் ஓய்வெடுக்க இருக்கை வசதிகள் இல்லை.

    சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. மலை மீது இருந்த தடுப்பு சுவர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.

    பைனாகுலர் அறை மூடப்பட்டுள்ளதால், இங்கு வரும் இளைஞர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மீது நின்று நகரின் இயற்கை அழகை ரசிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இத்தருணங்களில் லேசாக கால் தவறினாலும் பள்ளத்தில் விழும் நிலையுள்ளது. மேலும், பூங்காவுக்கு குழந்தைகளுடன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையுள்ளது.

    இதுதொடர்பாக ஓசூர் பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஓசூர் முதல் அத்திப்பள்ளி வரை உள்ள ஏராளமான தொழிற் சாலைகளில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.

    தொழிலாளர்கள் விடு முறை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க சந்திரசூடேஸ்வரர் கோவில் மற்றும் சிறுவர் பூங்காவுக்குவந்து செல்வது வழக்கம்.

    ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், பூங்கா பாழ்பட்டுள்ளது. எனவே, பூங்காவைச் சீரமைத்து, முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பூங்காவில் கூடுதலாக பொழுது போக்கு வசதிகளுடன் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • 10 நாட்களில் 8 மலைப்பாம்புகள், 5 நாகப்பாம்புகள், தலா 3 சாரைப் பாம்புகள், கண்ணாடி விரியன் மற்றும் 2 கட்டு விரியன் பாம்புகள் பிடிபட்டுள்ளன.
    • வேப்பன ப்பள்ளி சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும், பொதுமக்கள் வளர்த்த இரு கிளியும் மீட்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, வேலம்பட்டி, காவேரிபட்டணம், பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு உள்ளிட்ட பாம்புகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த தகவல் அடிப்படையில் வனத்துறையினர் பிடித்தனர்.

    இவை அனைத்தும் கிருஷ்ணகிரி வனச்சரகர் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக வனச்சரகர் ரவி கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த 10 நாட்களில் 8 மலைப்பாம்புகள், 5 நாகப்பாம்புகள், தலா 3 சாரைப் பாம்புகள், கண்ணாடி விரியன் மற்றும் 2 கட்டு விரியன் பாம்புகள் பிடிபட்டுள்ளன.

    மேலும், வேப்பனப்பள்ளி சாலையில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்றும், பொதுமக்கள் வளர்த்த இரு கிளியும் மீட்கப்பட்டன.

    இவற்றை மேலுமலை, வேப்பனப்பள்ளி, மகா ராஜகடை காப்பு காடுகளில் விடுவிக்க நடவடி க்கை எடுக்கப்பட்டுள்ளது.

    குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் பாம்பு வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதைப் பாதுகாப்பாகப் பிடித்து காட்டில் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது.
    • தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் நாரூரான் (வயது29). இவர் சூளகிரி பஸ் நிறுத்தம் அருகே கமிஷனுக்காக பணபரிவர்த்தனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த5-ந் தேதி நாரூரான் கடையில் இருந்தபோது பெண் உள்பட 3 பேர் வந்தனர்.

    அப்போது தங்களிடம் அரை பவுன் தங்க நகை உள்ளது என்றும், அதனை அடமானமாக வைத்துக் கொண்டு பணம் தருவீர்களா? என்று கேட்டனர். இதனை நம்பிய அவர் அந்த நகையை வாங்கி கொண்டு அவர்களுக்கு ரூ.2500-யை கொடுத்துள்ளார்.

    அவர்கள் சென்றபிறகு அந்த நகையை பரிசோதித்து பார்த்தபோது அது கவரிங் நகை என்று தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் செய்வதறியாது திணறினார்.

    இந்த நிலையில் அதே 3 பேர் மீண்டும் நேற்று நாரூரான் கடைக்கு வந்துள்ளனர். அப்போது தங்களிடம் 1900 கிராம் தங்க நகைகள் உள்ளதாகவும், அதனை எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனர்.

    இதனை கேட்ட நாரூரான் மர்ம நபர்கள் தன்னை அவர்கள் ஏமாற்றிய விவரம் ஏதும் அறியாதவர்போல் நடித்து அந்த நகைகளை பெற்றுக்கொள்வதாகவும், அதற்குண்டான பணம் தன்னிடம் இல்லை என்றும், சிறிது நேரத்தில் நண்பர்கள் எடுத்து கொண்டு வந்து விடுவார்கள் என்று கூறி 3 பேரையும் கடையில் அமர வைத்துள்ளார்.

    இதனை நம்பிய அந்த 3 பேரும் கடையில் இருந்தனர். அதற்குள் நாரூரான் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல்களை தெரிவித்தார். அவர்கள் உடனே சூளகிரி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த கிஷோர் (25), ராஜூ (35), மீனா (30) ஆகிய 3 பேர், தங்க நகை விற்பது போல் நடித்து கவரிங் நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தங்க நகை எனக்கூறி கவரிங் நகையை விற்க முயன்ற 3 பேர் பிடிபட்ட சம்பவம் சூளகிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிபணியிடங்கள் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்கள், ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (30).

    இவர்களுக்கு 12 ஆண் டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் கணவரை பிரிந்து பேரண்டப்பள்ளி அருகே கதிரேப்பள்ளியில் சுஜாதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் தேன்கனிகோட்டை பேட்டராய சாமி கோவில் அருகே சுஜாதா நடந்து சென்றார். அங்கு வந்த சுரேஷ் அவரிடம் தகராறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதில் சுஜாதா படுகாய மடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுரேசை கைது செய்தனர்.

    • மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
    • ஆய்வின் போது 46 கடைகள் மற்றும் 52 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 98 நிறு வனங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் சுதந்திர தினத்தன்று விடுமுறை வழங்காத 69 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடாசலபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்ட விதிகளின் படி, தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

    அவ்வாறு விடுமுறை அளிக்கப்படாதபட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவிப்பு அளித்து, அதன் நகலினை தொழிலாளர் உதவி, ஆய்வாளர்களுக்கு அனுப்பி விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் அதனை ஒட்டி வைக்க வேண்டும்.

    அதன்படி சுதந்திர தினமான 15-ந் தேதியன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சிறப்பு ஆய்வின் போது 46 கடைகள் மற்றும் 52 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 98 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சட்ட விதி முறைகளை பின்பற்றாத 32 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 69 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி புதுப் பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்ச வருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராசுவீதி, சேலம் சாலை, ரவுண்டானா வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதே போல மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    • அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கால்வாய் சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அங்குள்ள நடுநிலை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் பேகேபள்ளி, நல்லூர் மற்றும் பாகலூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நல்லூர் ஊராட்சி நடு நிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பேகேப்பள்ளி ஊராட்சி யில் ஒரு பயனா ளிக்கு ரூ.2 லட்சத்து 40,000- மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமான பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தவர், பள்ளியில், ' மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணித வாய்ப்பாடு குறித்து கற்றல் திறனை கேட்டறிந்தார். தொடர்ந்து நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கால்வாய் சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அங்குள்ள நடுநிலை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.

    மேலும் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்து, அந்த பகுதியில் ரூ.38 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், பாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் பொறியாளர் களுக்கு அறிவுறுத்தினார். 

    ×