search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்
    X

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் காளியம்மன், மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை அடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    • கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி புதுப் பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்ச வருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராசுவீதி, சேலம் சாலை, ரவுண்டானா வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதே போல மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    Next Story
    ×