search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
    X

    கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிபணியிடங்கள் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்கள், ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×