என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
- அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கால்வாய் சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அங்குள்ள நடுநிலை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியம் பேகேபள்ளி, நல்லூர் மற்றும் பாகலூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ரூ.3 கோடியே 75 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நல்லூர் ஊராட்சி நடு நிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தையும் மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேகேப்பள்ளி ஊராட்சி யில் ஒரு பயனா ளிக்கு ரூ.2 லட்சத்து 40,000- மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டு கட்டுமான பணிகளையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 1 லட்சம் மதிப்பில் 6 வகுப்பறை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தவர், பள்ளியில், ' மாணவர்களின் ஆங்கிலம் வாசிப்பு திறன் மற்றும் கணித வாய்ப்பாடு குறித்து கற்றல் திறனை கேட்டறிந்தார். தொடர்ந்து நல்லூர் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கால்வாய் சீரமைக்கும் பணியையும் ஆய்வு செய்து, அங்குள்ள நடுநிலை பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.
மேலும் அங்கன்வாடி மையத்தையும் ஆய்வு செய்து, அந்த பகுதியில் ரூ.38 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பாகலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் பொறியாளர் களுக்கு அறிவுறுத்தினார்.






