என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை சீரமைப்பு பணிகள்:  கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    சாலை சீரமைப்பு பணிகள்: கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

    • அந்த வழியாக எதிர்திசை சென்ற வாகனங்கள், காவேரிப்பட்டணம் நகர் பிரிவு சாலை வரை சென்று, மீண்டும் வழக்கமான சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.
    • சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் - சேலம் தேசிய நெடுஞ்சா லையின் இருபுறமும் கடந்த சில நாட்களாக, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, சேலம் நோக்கி சென்ற வாகனங்கள், கிருஷ்ணகிரி அணைப்பிரிவு சாலை அருகே எதிர்திசையில் திருப்பி விடப்பட்டது.

    அந்த வழியாக எதிர்திசை சென்ற வாகனங்கள், காவேரிப்பட்டணம் நகர் பிரிவு சாலை வரை சென்று, மீண்டும் வழக்கமான சாலைக்கு திருப்பிவிடப்பட்டன.

    இதனால், சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதே போல், கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் அவதானப்பட்டியில் இருந்து காவேரிப்பட்டணம் வரை வாகன நெரிசல் காணப்பட்டது.

    இந்த போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை சிக்கியதால், மிகுந்த சிரமத்துடன் சென்றது. கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடிக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரியில் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து தொடர்புடைய முன்கூட்டி யே தெரிவிப்பதில்லை.

    இதே போல் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல தேவையான நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் 5 கிலோ மீட்டர் சாலையை கடக்க குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் தேவைப்படுகிறது.

    நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் ஓசூர், பெங்களூர் மற்றும் சேலம் நோக்கி சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×