என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, இன்று விமரிசையாக நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள், கடந்த வெள்ளிக்கிழமை, அங்குரார்ப்பணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங் கியது. தொடர்ந்து,  நாள்தோறும் இரவு, வாகன உற்சவங்களும்,சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளுக்கு பின் சந்திரசூடேஸ்வர சாமி, வாகனத்தில் எழுந்தருளி, மேள, தாளம் முழங்க வீதி உலாவாக அழைத்துச் செல்லப்பட்டார்.

    நேற்று (வியாழக்கிழமை) இரவு சாமிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சந்திரசூடேஸ்வரர், யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, ஓசூர் தேர்பேட்டையில் தேரோட்டம் நடந்தது. 

    இதில், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் சி. ஆனந்தய்யா ஆகியோர் கலந்து கொண்டு, தேர் வடம்பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். தொடர்ந்து, பக்தர்கள், பக்தி கோஷத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். 

    மேலும் விழாவில், ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவை யொட்டி, ஓசூர் தேர்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர், நீர் மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங் கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஓசூர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

    நாளை (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன், பல்லக்கு உற்சவம், விடிய, விடிய நடைபெறுகிறது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, தேர்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவம் நடை பெறுகிறது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மூத்த மகள் இறந்த சோகத்தில் இளைய மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொரட்டகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). பொக்லைன்ஆபரேட்டர். இவரது மனைவி கங்கம்மா (36). இவர்களது மகள்கள் ராணி (17), மோனிஷா (7). மூத்த மகள் ராணி, தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராணி, சரியாக படிக்கவில்லை என்று கங்கம்மா திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ராணி, கடந்த 11ந் தேதி எலி பேஸ்ட் தின்றுள்ளார்.

    இதையடுத்து ராணியை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த நிலையில் மூத்த மகள் இறந்த துக்கம் தாங்காமல் கங்கம்மா இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் அவரை தேற்றி வந்தனர்.

    தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து வந்த கங்கம்மா, நேற்று முன்தினம் இளைய மகள் மோனிஷாவுக்கு எலி பேஸ்டை கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மோனிஷா, கங்கம்மா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூத்த மகள் இறந்த வேதனையில் இளைய மகளை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நாய்கள் கடித்து குதறியத¤ல் புள்ளிமான் காயம் அடைந்தது.
    சூளகிரி, 

    -கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி சென்னப்பள்ளி வனப் பகுதியில் தற்போது நிலவி வரும் கோடை வெயில் காரண மாக நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. இதனால் காட்டில் வாழும் வனவிலங்குகள் இரை, தண்ணீர் தேடி  அருகே கிராமங்களுக்குள் வருகின்றன. 

    இந்த நிலையில் சூளகிரி வாணியர் தெருவில்  இன்று காலை தண்ணீரை தேடி ஒரு புள்ளிமான் ஊருக்குள் வந்துள்ளது. அப்போது    அங்கு நின்ற தெரு நாய்கள் , புள்ளி மானை சுற்றி வளைத்து கடித்து குதறின. இதில் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் புள்ளி மான் உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் புள்ளிமான் ஊருக்குள் வந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மானை மீட்டனர். 
    கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் பெண் பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே அவதானபட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது50). இவரது மனைவி மக்கம்மாள் (42). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று ஓசூருக்கு தருமபுரி&ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது கிருஷ்ணகிரி அருகே வரும் போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கட்ராமன் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான மக்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வெங்கட்ராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே குழந்தையுடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள அனுமன்கோவில்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் திருமால். இவரது மனைவி மோனிகா (வயது20). இவர்களுக்கு ஒரு வயதில் அருணி என்கிற பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மோனிகா கடைக்கு சென்று வருவதாக கூறி தனது குழந்தையுடன் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. 

    இது குறித்து திருமால் பாரூர் போலீசில்  புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாய மான அவர்களை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் காவேரிபட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாலினி, பேரூராட்சி துணைத்தலைவர் மாலினி மாதையன், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் முருகம்மாள் சுமதி, கலா, ராஜலட்சுமி சாரதா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவையொட்டி ஓசூரில் நாளை உள்ளூர் விடு முறை விடப்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வருகிற 18-ந் தேதி தேர் திருவிழா நடைபெறு வதையொட்டி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிருஷ் ணகிரி மாவட்ட கலெக் டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் தேர்திருவிழா வருகிற 18-ம் தேதி (வெள் ளிக்கிழமை) நடை பெறுகிறது. 

    இதற்காக அன்றைய தினம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுரிகளுக்கு உள் ளூர் விடுமுறை அளிக் கப் படுகிறது. 

    இதனை ஈடுகட்டும் வகையில் வரும் 26-ந் தேதி (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.  

    இந்த உள்ளுர் விடுமுறை நாள் செலவாணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் அறிவிக் கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடு முறை நாளன்று ஓசூர் கோட்டத்திற்கு உட் பட்ட  கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக் கும் பொருட்டு குறிப் பிட்ட பணியாளர் களோடு செயல்படும் என தெரிவிக்கப் ட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த ராசிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோதி, (வயது48). கூலி தொழிலாளி. இவரது கணவர் வெங்கட்டப்பன் இறந்துவிட்ட நிலையில், இவர்களது இரு மகன்களும் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஜோதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அதேபகுதியை சேர்ந்த லாரி டிரைவரான முருகேசன், 32 கடந்த, 14 நள்ளிரவில் ஜோதி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்துள்ளார். 

    இதுகுறித்து ஜோதி அளித்த புகார்படி முருகேசனை கந்திக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏட்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
    ஓசூர், 

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று ஏட்டு சரவணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக  அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் தொழில் அதிபரை காரில் கடத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கிருஷ்ணகிரி, 

    தருமபுரி மாவட்டம், நாசோனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது38).  தொழிலதிபரான இவர் கடந்த 12ந்தேதி அன்று தனது காரில் கிருஷ்ணகிரி டேம் சோக்காடியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டிற்கு வந்தார். அங்கு வியாபாரம் விஷயமாக  நண்பர்கள் 7 பேருடன் பேசி கொண்டு மீன் சாப்பிட்டு இருந்தனர். 

    அப்போது அவர் களுக்குள் திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 7 பேர் என மொத்தம் 14 பேர் கொண்ட சேர்ந்த கும் பல் அர்ச்சுனை காரில் வைத்து கடத்தினர். 

    அப்போது ஓடும் காரில் அந்த கும்பல் அர்சூனனை சர மாரியாக தாக்கினர். மேலும் அவரை இரும்பு கம்பி யால் தாக்கியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் உத்த னப்பள்ளி அருகேயுள்ள அலேசீபம் பகுதியில் அர்ச்சு னனை இறக்கி விட்டு சென்று விட்டனர். 

    அப்போது அவரது வைத் திருந்த கார் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல் போனையும்  பறிமுதல் செய்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளனர்.

    இது குறித்து அர்ச்சுனன் கிருஷ்ணகிரி டேம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தேன் கனிக்கோட்டை அடுத் துள்ள சிகரலப் பள்ளியை சேர்ந்த குமார் (வயது 32), விஜி, அய்யப்பன், பூச்சி, முனி ராஜ், சுரேஷ், கரியன் உள்பட 14 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் குமார் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் 18 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெட்டிக்கடையின் அருகில் ஒரு பேக்குடன் சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அவர் வைத்திருந்த பையில் 18 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவர் விழுப்புரம் மாவட்டம், ஏரனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது32) என்பதும், அவர் பெங்களூருவில் இருந்து விழுப்புரத்திற்கு குட்கா கடத்தி சென்ற போது கிருஷ்ணகிரியில் சிக்கி  கொண்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர். அவர் கடத்தி வந்த குட்கா விலை மதிப்பு ரூ.27 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அருகே சக மாணவிகள் கேலி செய்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள அப்புகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகள் சரண்யா (வயது15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சரண்யாவுக்கு உடலில் வெள்ளை தழும்பு உள்ளது. இதனை பள்ளியில் சக மாணவ, மாணவிகள் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரண்யா கடந்த 13ந்தேதி அன்று வீட்டில் யாருக்கும் தெரியாமல் எலிபேஸ்டை சாப்பிட்டார். 

    இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்றுஅதிகாலை சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×