என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கோதண்டராம சுவாமி பங்குனி மகா தேரோட்டம் நடந்தது.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமூட்லு கிராமத்தில் உள்ள  500 வருடம் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத மகா தேர் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 

    அதேபோல் இந்த ஆண்டும் கடந்த சனிக்கிழமை முதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப் பட்டு ஊர்வலமாக வந்து பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித் தார். 

    இந்த நிலையில் மகா தேரோட்டத்தில் ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை முதலே சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தேரில் சுவாமி எழுந்தருளினார். இதையடுத்து விழாவில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோவிந்தா.. கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 

    விழாவில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50&க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    திருவிழாவில் வேப்பனப்பள்ளி  போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி தலைமையில் 50&க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் புளியமரத்துக்கு தீ வைத்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புளியமரத்துக்கு மர்ம கும்பல் இன்று அதிகாலை மர்ம கும்பல்  தீ வைத்துள்ளனர். இதனால் மளமள என எரிந்த தீயை பொதுமக்களால் தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை  யடுத்து தீயணைப்புத் துறையின் சிறப்பு நிலை அலுவலர் தேவராஜன் தலைமையில்  உடனடியாக  வந்து தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

    இதை அறிந்த கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத் தலைவர் மும்தாஜ் செயதுஅசேன் ,பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர்  பார்வையிட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிக்கோட்டையில் தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிக் குட்பட்ட ஏவிஎஸ் லே-அவுட்டில் குடியிருப்பவர் சூடேஷ் (வயது 37). இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் கடந்த 8&ந் தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மல்லசந்திரம் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டிற்குச் சென்றிருந்தார். மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நெக்லஸ், தோடு , வளையல், மோதிரம் உள்பட 6 பவுன் தங்க நகைகள் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை காணவில்லை.

    வீட்டின் கதவு பூட்டை உடைத்து மர்ம கும்பல் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சூடேஷ், தேன்கனிக்கோட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க டி.எஸ் பி. கிருத்திகா, இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த கோபா லப்பன் மகன் முனிராஜ் (24), பெங்களூர் கொல்லூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த முனியப்பா மகன் சதீஷ் (21), பெங்களுர் ராஜீவ் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் நாகேஷ் (21) ஆகிய 3 பேர் கொள்ளையடித்து விசாரனையில் தெரியவந்தது 

    இதையடுத்து முனிராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்து கொள்ளையடித்த  நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.  கைதான 3 பேரையும் போலீசார் ஒசூர் சிறையில் அடைத்தனர் .

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மில் ஊழியரை கடத்திய வழக்கில் மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி  (வயது 25). இவர் பூக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (35). இவர் அரூர் அருகே உள்ள கோபிநாதம்பட்டி கூட்ரோடு உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரூ.2.50 லட்சம் கொடுத்தால் அதை இரட்டிப்பு தொகையை வழங்குவதாக ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தியிடம் ஆசை வார்த்தை  கூறினார். இதை நம்பி கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்திடம் ரூ.1.50 லட்சம் கொடுத்தார். ஆனால் பணம் கொடுக்காமல் ராமலிங்கம் ஏமாற்றி வந்தார். 

    இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்தை நண்பர்கள் துணையுடன் திருப்பூருக்கு காரில் கடத்தி சென்றதாக  கூறப்படுகிறது. அப்போது ராமலிங்கம், பணத்தை சிலம் பரசன் என்பவரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே ராமலிங்கத்தின் மனைவி செண்பகம், தனது கணவரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்று விட்டதாக மத்தூர் போலீசில் புகார் செய்தார். இதை தெரிந்து கொண்ட கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கத்தை ஊருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து ஊருக்கு திரும்பிய ராமலிங்கம், இதுபற்றி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்தூரில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    இந்த நிலையில் பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் மேலபுழுதியூர் பெரும்பட்டம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (31), மத்தூர் அருகே ஓட்டப்பட்டியை சேர்ந்த நாகேஷ்(31) ஆகிய 2 பேரை நேற்று  மத்தூர் கவுண்டனூரில் கைது செய்தனர்.

    இந்த பண இரட்டிப்பு மோசடி வழக்கில் சிலம்பரசன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் மத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னகொத்தூர் மற்றும் தேவர்குந்தாணி கிராமங்களுக்குட்பட்ட மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. 

    விழாவை முன்னிட்டு இன்று சின்ன கொத்தூர் மற்றும் தேவர்குந்தாணி கிராமத் தில் எருதுவிடும் விழா நடைபெற்றது.காலை 7 மணி முதல் 12 மணிவரை நடை பெற்ற இந்த  எருதுவிடும் விழாவில் வேப்பனப் பள்ளி சுற்று வட்டார பகுதி களான சூளகிரி, பேரிகை, பாகலூர், காவேரிபட்டினம், ராயக் கோட்டை, மகராஜகடை, கிருஷ்ணகிரி, ஓசூர் நகரங் களில் மற்றும் கர்நாடக& ஆந்திரா மாநிலங்களில் இருந்தும்  300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 

    இந்த விழாவில் சுமார் 100 மீட்டரை தொலைவை 8.00 வினாடிகளில் விரைவாக கடந்த காளைக்கு ரூ. 55 ஆயி ரம் முதல் பரிசு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த விழாவில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். வேப்பனப்பள்ளி மற்றும் குருபரப்பள்ளி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுசூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்குவதற்கான முதல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி பேசியதாவது:&

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

    நமது சுற்றுச்சூழலை காப்பது நம் கடமை என்ற உணர்வோடு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகிழித்தாள் உறை, தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள் மற்றும் தேநீர் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள் ஆகிய பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    மேலும், வாழை இலைகள், தாமரை இலைகள், பாக்குமர இலைகள், உலோக தட்டுகள், பீங்கான் தட்டுகள் மற்றும் குவளைகள், உலோக குவளைகள் மற்றும் கொள்கலன், கண் ணாடி குவளைகள் மற்றும் பாட்டில்கள் ஆகிய பொருட் கள் பயன்படுத்த வேண்டும்.

    பொதுமக்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்கசிவால் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது50). கார் டிரைவர்.  இவரது மனைவி செல்வி.

    இவர் அதே பகுதியில் பழனி என்பவரின் ஓட்டு வீட்டில்  மனைவியுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலுள்ள மின் வயர்களில் ஏற்பட்ட மின்கசிவால் தீ ஏற்பட்டது. தீ மளமள என பரவியதால் வீடு முழுவதும் பரவியது. இதில்  வீடு தீப்பற்றி எரிவதை கண்ட கணவன் &மனைவி இருவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, மின்விசிறி, 2 பவுன் நகை, பணம் 5 ஆயிரம், வீட்டு சாமான்கள், புடவைகள், ஆவணங்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

    இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கண்ணன்& செல்வி ஆகியோரின் மகன் பிரகாஷ் (22) கடந்த 2 மாதத்துக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக வடு மறையாமல் வேதனை யில் இருந்து வந்தனர். இந்த நிலையில்  குடியிருந்த வீடும்  தீப்பிடித்து எரிந்த சம்பவம் மீண்டும் அவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய சம்பவம் மாறி வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    கிருஷ்ணகிரியில் வழிபாதை தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி டவுன் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது29). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகண்டனுக்கும், ரமேஷ்க்கும் இடையே வழிபாதை பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவர் களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

    இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு நடந்தது-. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த காமராஜ், அஜித் ஆகியோர் சேர்ந்து ரமேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ரமேஷை அககம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து ரமேஷ் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டன், அஜித் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வழியாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பர்கூர்-வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் ஜங்சன் பிரிவு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில் அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். லாரியில் 44 பைகளில் சுமார் 1 டன் புகையிலை பொருட்கள் இருப்பதும், அதன் மதிப்பு சுமார் 6 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் லாரியில் இருந்து தப்பியோடியவர்கள் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியை சேர்ந்த லெட்சுமணன் (41), பழைய தருமபுரியை சேர்ந்த தமிழகன் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பணம் திருடியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள அத்திகானூர் பகுதியில் எருது விடும் விழா நடந்தது. இந்த எருதாட்ட விழாவில் 400 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமான காளைகளை வீரர்கள் அடக்கினர். 

    இந்த எருதாட்ட விழாவில்  திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் அடுத்துள்ள கரம்பூர் கிராமத்தை சேர்ந்த காந்தி (வயது55) என்பவர் கலந்து கொண்டு கண்டு கழித்து விட்டு இருந்தார். 

    அப்போது அவர் பேண்டில் வைத்திருந்த மணி பர்சை பிளேடு போட்டு ஒருவர் 1600 பணத்தை திருடினார். இதனை சுதாரித்த காந்தி அவரை பிடித்தார். பின்னர் அங்கு கூடி இருந்த பொதுமக்களும் அந்த திருடனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த திருடனை பிடித்து மத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த திருடன் கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்த வேலன் (38) என்பது தெரியவந்தது. உடனே அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான அவரை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பணம் இரட்டிப்பு விவகாரத்தில் தருமபுரி வியாபாரி கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள சைதா பேட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது25). இவர் மத்தூர் பஸ்நிலையத்தில் பூக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கும், தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி தாலுகா கள்ளியூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (40) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ராமலிங்கம் தன்னிடம் ரூ.1லட்சம் கொடுத்தால்  அதை 2 லட்சமாக சில மாதங்களில் இரட்டிப் பாக தருகிறேன் என்று கிருஷ்ணமூர்த்தியிடம் கூறினார். 

    இதனை நம்பிய அவர், ராமலிங்கத்திடம் ரூ-.1 லட்சத்தை கொடுத் துள்ளார்.  ஆனால் 2 வருடமாகியும் அந்த பணத்தை கொடுக்கவில்லை.  

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி ஆத்திரம் அடைந்து கடந்த மாதம் 27ந்தேதி அன்று ராம லிங்கத்தை ஆட்களை வைத்து கடத்தியுள்ளார். பிறகு கடத்திய ராமலிங்கத்தை திருப்பூரில் உள்ள ஒரு இடத்தில் வைத் துள்ளனர்.

    அப்போது நீ வாங்கிய பணம் யாரிடம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு ராமலிங்கம் உன்னிடம் வாங்கிய பணத்தை நான் பொம்மிடி அடுத்துள்ள ஜாலியூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசனிடம் கொடுத்துள்ளேன் என்றார். உடனே அங்கு விரைந்த கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் வருவது தெரிந்து சிலம்பரசன் தப்பி சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மத்தூர் போலீசில் ராமலிங்கம் மனைவி புகார் செய்தார். அதில் எனது கணவரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி சென்று விட்டார் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில்  போலீசார் பூக்கடைக்காரர் கிருஷ்ண மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் கடத்தல் கும்பலிடம் இருந்து ராமலிங்கம் தப்பி வந்து விட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்பின்னரே பண இரட்டிப்பு மோசடி, கடத்தல் விவகாரத்தில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் பெரிய ஏரியில் தெப்ப உற்சவம் நடந்தது.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் கங்கே மத குலத்தார் (மீனவ சமுதாயம்) சார்பாக நேற்று இரவு பெரிய ஏரியில் தெப்ப உற்சவம் பெற்றது.

    முன்னதாக ஸ்ரீ பேட்டராய சுவாமி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி ,சமேத ஸ்ரீ பேட்டராய சுவாமி உற்சவ மூர்த்திகளை பல்லக்குதேரில் அமர்த்தி வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்து தேவராஜன் ஏரியில் உள்ள உற்சவ மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கங்கே மத குலத்தார் சார்பாக சிறப்பு பூஜைகள் நடத்தி பெரிய ஏரியில் மின்னொளியில் அமைக் கப்பட்டிருந்த தெப்பத்தில் பேட்டராயசுவாமி உற்சவ சிலைகளை வைத்து ஏரி முழுவதும் வலம் வந்தனர். 

    நிகழ்ச்சியில் கர்லா சுற்றுதல், கம்பு மற்றும் கத்தி சுற்றுதல், போன்ற சாகச நிகழ்ச்சிகளை இளைஞர்கள் செய்து காண்பித்தனர் .வாணவேடிக்கைகள் நடைபெற்றது இதனை காண தேன்கனிக் கோட்டை மற்றும் சுற்றுபுற பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    ×