என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை நாயக்கனூர் ஏரி அருகே வெங்கடேஷ் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் வெங்கடேசனை மர்ம கும்பல் கொலை செய்து ஏரி அருகே பிணத்தை வீசி விட்டு சென்றதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து வாலிபர் வெங்கடேஷ் பிணத்துடன் சிங்காரப்பேட்டை- அத்திப்பாடி சாலையில் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்ஸ்சாண்டர், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி மற்றும் போலீசார் விரைந்தனர்.

    அப்போது நடுரோட்டில் பிணத்தை வைத்து மறியல் செய்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வெங்கடேசின் உறவினர்கள் போலீசாரிடம் கூறும் போது, வெங்கடேஷ், வேறு சமூக பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதனால் பெண் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    வெங்கடேஷ் சாவு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று வெங்கடேஷ் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் வாலிபர் வெங்கடேஷ், மின்வேலியில் சிக்கி பலியானது தெரியவந்தது.

    நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வெங்கடேஷ், வீட்டுக்கு தெரியாமல் தனது காதலியை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது செல்லும் வழியில் அங்கு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் அன்பழகன், வாலிபர் வெங்கடேஷ் மின்வேலியில் பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தன் மீது போலீஸ் வழக்கு பாயுமோ? என்று நினைத்து பயந்து வெங்கடேஷ் உடலை, நாயக்கனூர் ஏரி அருகே கொண்டு சென்று போட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து சிங்காரப்பேட்டை போலீசார், அன்பழகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயியான இவரது மனைவி கிருஷ்ணவேணி. திருமணமாகி 3வருடம் ஆன நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 19ந்தேதி அன்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு நடந்தது. 

    இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மிண்டிகிரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் வாலிப்பட்டி பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவர் அந்த நிறுவனத்தில் மூலம் தவணை முறையில் புது மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார். 

    கடந்த சில மாதங்களாக அருணாசலம் வாங்கிய அந்த வாகனத்திற்கு சரிவர பணம் கட்டவில்லை. இதனால் அந்த நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக்கேயன்  கடந்த 18&ந்தேதி அன்று அருணாசலம் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் இல்லாததால் உறவினர் மணிகண்டனிடம் வண்டிக்கு பணம் கட்டவில்லை என கூறியதாக தெரிகிறது.

    இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உருட்டு கட்டையால் சரமாரியாக  கார்த்திக்கேயனை தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கேயனை அக்கம் பக்கத் தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகையிலை-மதுபாட் டில்களை கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடியில் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த  வழியாக வந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மதுபாட்டில்கள் இருப்பதும் தெரியவந்தது.

    அதில் இருந்த 33 கிலோ புகையிலை பொருட்கள் ரூ.41 ஆயிரம் மதிப்பு இருக்கும் எனவு-ம், 4 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். புகையிலை மற்றும் மதுபாட்டில்கள் ஆகியவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் லாரி என மொத்தம் ரூ.4.45 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர்.

    இந்த லாரியை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுககாடு பகுதியை சேர்ந்த அஜித் (வயது27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    மேலும் இந்த புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு கடத்தி சென்ற போது சிக்கியுள்ளனர்.
    கிருஷ்ணகிரியில் பழைய இரும்பு கடையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றன
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது62). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கடையில் வைத்திருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள 20 கிலோ காப்பர், 45 ஆயிரம் மதிப்புள்ள பைக் ஆகியவைகளை காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் திருடிவிட்டு சென்று விட்டனர். இதன் மதிப்புள

    இது குறித்து ஆறுமுகம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் காதர்பாஷா, மாணிக்பாஷா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வீரபத்திர சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தேவே கவுண்டன் தொட்டி கிராமத்தில் உள்ள சிவலிங்கேஸ்வர சுவாமி, வீரபத்திர சுவாமி, சனீஸ்வர சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுவாமிகளுக்கு ஒசப்புரம் மடாதிபதி கரி பசவ ராஜேந்திர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தேர் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதநீர் தெளித்து உற்சவ மூர்த்திகளை அமர்த்தி பூஜைகள் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ஹர ஹர மகாதேவ் என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீரகாசே என்ற வீரநடன குழுவினரின்  கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலை சுற்றி வந்து மாலையில் தேரை நிலை நிறுத்தினர்.

    விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்ன தானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, உரிகம், சுற்றுப்புற  பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண் டனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டையில் உள்ள மிகப்பழமை வாய்ந்த கவி ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 9&ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    விழாவையொட்டி தினமும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேர் திருவிழா நேற்று நடைபெற்றது . அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவ மூர்த்திகளை தேரில் அமர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தேன்கனிக் கோட்டை பேருராட்சி தலைவர் சீனிவாசன் வடம்பிடித்து  தேர் திருவிழா துவக்கி வைத்தார். தொடர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

    தேர் கோவிலை சுற்றி வலம் வந்து மாலை நிலை நிறுத்தப்பட்டது விழாவில் தேன் கனிக் கோட்டை, கெலமங்கலம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர் , பானகம், அன்னதானம் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது நேற்று நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    காவேரிப்பட்டணம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்று பாலத்தின் மீது நேற்று நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜே.பி கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணை அமைப்பாளர் கோனப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் மாரியப்பன், தருமபுரி மாவட்ட தலைவர் முனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்பாளர் பழனிவேல் தொடங்கி வைத்தார். 

    தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும்,  கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க கோரியும்  பிளாஸ்டிக்கை தடுக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். முடிவில் தருமபுரி மாவட்ட பொது செயலாளர்  முனியப்பன் நன்றி கூறினார்.
    கிருஷ்ணகிரியில் வாலிபரிடம் ரூ.7.50 லட்சம் மோசடிசெய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தசுந்தரம் (வயது28). ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த வரும் 13.7.2021 அன்று ஒரு போன் வந்தது. அதில் நீங்கள் ஒரு கம்பெனியில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினர். இதனை நம்பி சிவானந்தசுந்தரம் தனது வங்கி கணக்கின் விபரம் தெரிவிக்கவே அதில் இருந்து ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்ததார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிவானந்தசுந்தரம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடிய மணிகண்டன், கார்த்திக் ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவர் மீது வழக்குபதிவு செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே 10 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகை நத்தம் செல்லும் கிராம சாலையில் நேற்று மாலை 9 மணி அளவில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையில் குறுக்கே ஊர்ந்து கொண்டு இருந்தது. 

    இந்த மலைப் பாம்பு சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டிருந்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு வந்த வாகன ஓட்டிகள் சாலை கடக்க முடியாமல் இருபுறமும் நின்று கொண்டிருந்தனர்.

    இதையடுத்து அப்பகுதிக்கு பொதுமக்களே நீண்ட நேரம் போராடி சாலையில் இருந்து பாம்பை கீழே இறக்கி   பாம்பை பத்திரமாக பிடித்தனர். 

    இதையடுத்து அந்த பாம்பை பொதுமக்கள் பாதுகாப்பாக் கொங்கனப்பள்ளி காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். 10 அடி நிளமுள்ள  மலைப்பாம்பு சாலையில் குறுக்கே படுத்து கிடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    வீட்டில் வைத்து பராமரிக்க முடியாததால் ஓசூர் பஸ் நிலையத்தில் வயதான மூதாட்டி& மகளை விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
     ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு யாரும் ஆதரவற்ற நிலையில் 2 மூதாட்டிகள் இருந்தனர். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் இருவரும் உட்கார்ந்து இருந்ததால் அங்கு நின்றவர்கள் பார்த்தனர். 

    அப்போது அங்கு இருந்த ஒரு கடைக்காரர் , 2 மூதாட்டிகளையும் மாநகராட்சி ஆதரவற்ற இரவு தங்கும் விடுதிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தார். இதையடுத்து முதியோர்கள் இருவரும் ஆதரவற்ற விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த சரசு (வயது 86), அவரது மகள் சாந்தி (65) என்பதும் தெரிய வந்தது. 

    இந்த நிலையில் சாந்தி மற்றும் அவரது தாய் சரசு ஆகியோருக்கு மிகவும் வயதாகி விட்டதால், அவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், இருவரையும் ஓசூர் பஸ் நிலையத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது. வயதான தாயும், அவரது மகளும் எங்கு செல்வது? என தெரியாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் நீண்டநேரமாக பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்ச சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வயது மூப்பு என்பது எல்லோருக்கும் வாழ்க்கையில் வரும். அதேநேரத்தில் இதுபோன்ற காலங்களில் வயதானவர்களை வீட்டில் வைத்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.  இதுபோல் மனசாட்சி இல்லாமல் வயதானவர்களை எங்காவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு செல்லக்கூடாது. மேலும் பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்கள், வயதானவர்களை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் அனைத்து ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    கிருஷ்ணகிரி,
    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் கிருஷ்ணகிரி அஹ்லே சுன்னத் வல் ஜமாத் சொசைட்டி எனப்படும் அனைத்து ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பட்டத்திற்கு அனைத்து ஜமாத் தலைவர் சையத் இர்பானுல்லா உசைனீ தலைமை தாங்கினார். செயலாளர் ஆசாத் மற்றும் அனைத்து ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் மத அடையாளங்கள் உள்ளது. அந்தந்த மதத்தினர் அவர்களது ஆடைகளை அணி வருகின்றனர். அதுபோல் இஸ்லாமிய மதத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து செல்கின்றனர். இந்தியஅரசியலமைப்பு சட்டம் 25 மூலம் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர்.

    கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைக்கு எதிரானதாகும். முகத்திரை என்னும் ஹிஜாப் அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை அந்த உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அரசையும் உயர்நீதி மன்றத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
    ×