என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
போலீஸ் ஏட்டு உடல்நலக்குறைவால் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏட்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
ஓசூர்,
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ஏட்டு சரவணனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தருமபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






