என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி டேம் அருகே தொழில் அதிபரை காரில் கடத்தி கொல்ல முயன்ற கும்பல் தொழில்போட்டியில் முன்விரோதமா? போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரியில் தொழில் அதிபரை காரில் கடத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், நாசோனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது38). தொழிலதிபரான இவர் கடந்த 12ந்தேதி அன்று தனது காரில் கிருஷ்ணகிரி டேம் சோக்காடியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டிற்கு வந்தார். அங்கு வியாபாரம் விஷயமாக நண்பர்கள் 7 பேருடன் பேசி கொண்டு மீன் சாப்பிட்டு இருந்தனர்.
அப்போது அவர் களுக்குள் திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 7 பேர் என மொத்தம் 14 பேர் கொண்ட சேர்ந்த கும் பல் அர்ச்சுனை காரில் வைத்து கடத்தினர்.
அப்போது ஓடும் காரில் அந்த கும்பல் அர்சூனனை சர மாரியாக தாக்கினர். மேலும் அவரை இரும்பு கம்பி யால் தாக்கியுள்ளனர். பின்னர் அந்த கும்பல் உத்த னப்பள்ளி அருகேயுள்ள அலேசீபம் பகுதியில் அர்ச்சு னனை இறக்கி விட்டு சென்று விட்டனர்.
அப்போது அவரது வைத் திருந்த கார் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல் போனையும் பறிமுதல் செய்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ச்சுனன் கிருஷ்ணகிரி டேம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தேன் கனிக்கோட்டை அடுத் துள்ள சிகரலப் பள்ளியை சேர்ந்த குமார் (வயது 32), விஜி, அய்யப்பன், பூச்சி, முனி ராஜ், சுரேஷ், கரியன் உள்பட 14 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் குமார் என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். மற்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story






