என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்து குதறியதில் காயம் அடைந்த புள்ளிமானுக்கு பொதுமக்கள், முதலுதவி சிகிச்சை அளித்த போது எடுத்த படம்.
நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நாய்கள் கடித்து குதறியத¤ல் புள்ளிமான் காயம் அடைந்தது.
சூளகிரி,
-கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி சென்னப்பள்ளி வனப் பகுதியில் தற்போது நிலவி வரும் கோடை வெயில் காரண மாக நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. இதனால் காட்டில் வாழும் வனவிலங்குகள் இரை, தண்ணீர் தேடி அருகே கிராமங்களுக்குள் வருகின்றன.
இந்த நிலையில் சூளகிரி வாணியர் தெருவில் இன்று காலை தண்ணீரை தேடி ஒரு புள்ளிமான் ஊருக்குள் வந்துள்ளது. அப்போது அங்கு நின்ற தெரு நாய்கள் , புள்ளி மானை சுற்றி வளைத்து கடித்து குதறின. இதில் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் புள்ளி மான் உயிருக்கு போராடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து புள்ளிமானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் புள்ளிமான் ஊருக்குள் வந்தது பற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து மானை மீட்டனர்.
Next Story






