என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே நாயை அடித்து கொன்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள இளவம்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது45), அதே பகுதியை சேர்ந்த உறவினரான காசிராஜன் (47).
இந்த நிலையில் கடந்த 23-&ந் தேதி சிவக்குமார் கொட்டகை அமைப்பதற்காக நிலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் சுத்தம் செய்து முட்புதர்களுக்கு தீ வைத்துள்ளார்.
அப்போது ஏன் வன பகுதியில் தீ வைக்கின்றாய் என காசிராஜன், சிவக்குமாரை தட்டி கேட்டார். அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டிருந்த போது சிவக்குமார் வளர்த்து வந்து வீட்டு நாய் காசிராஜனை மூன்று இடங்களில் கடித்தது. இதில் ஆத்திரமடைந்த காசிராஜன் அந்த நாயை அடித்து கொன்றார்.
இது குறித்து சிவக்குமாரின் மாமியார் லட்சுமி சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் காசிராஜன் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வாராஜ், காசிராஜன் அவரது மனைவி குமாரி, தாயார் பழனியம்மாள் ஆகிய 3 பேர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். அதே போல் வனபகுதியில் காசிராஜன் தீ வைத்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வாணியர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஸ் என்கிற ராஜா (வயது35). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு 13 வயதில் மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் தூக்குபோட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசமி ஆணையம் விசாரித்தால் ஜெயலலிதா மரணம் குறித்து பல உண்மைகள் வெளிவரும் என்று ஓசூரில் புகழேந்தி கூறினார்.
ஓசூர்,
அ.தி.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும் என்று மனு அளித்திருப்பதாக புகழேந்தி தெரிவித்தார்.
மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதை தொடர்ந்து, இந்த கமிஷனை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எடப்பாடி பழனிசாமியுடன், நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன். நடந்தவைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் வரிப்பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்.
பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைப் பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது பன்னீர்செல்வம் வாக்குமூலம் மூலம் தெளிவாகிறது. எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதல்& அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து புகழேந்தி நிருபர்களிடம் கூறும் போது, ‘‘ ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 4-&ந்தேதியா, அல்லது 5-ந்தேதியா? என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதியின்படி, ஆறுமுகசாமி கமிஷனை மீண்டும் செயல்பட நடவடிக்கை மேற்கொண்ட முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மாரங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி கலைவாணி.
இந்த நிலையில் கணவன்& மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கலைவாணி வீட்டில் இருந்த மண்ணென்யை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டு அலறினார். இதையறிந்த உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் 1200 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்றுமுன்தினம் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்&இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலை, ராசுவீதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 50 கிலோ அளவிலான, 24 மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில் அந்த வீட்டில் குடியிருக்கும் பாலாஜி(வயது34) என்பவர் அப்பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பதும், அதனை பாலீஷ் செய்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நாயை அடித்து கொன்ற தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி புவனேஸ்வரி வயது (வயது40). நேற்று அருகாமையில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை அமைப்பதில் புவனேஸ்வரி மற்றும் மகாலட்சுமி இருவருக்கும், காசிநாதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காசிநாதன், புவனேஸ்வரி வளர்த்து வந்த வளர்ப்பு நாயை அவர்கள் கண்முன்னே அடித்து கொன்றுள்ளார்.
இது குறித்து புவனேஸ்வரி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நாயை அடித்து கொன்ற காசிநாதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவியை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த மேல்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 35). விவசாய கூலித்தொழிலாளி. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
அதே ஊரை சேர்ந்தவர் மாதேவி (32). இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் பசப்பாவும், மாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்ததால் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் மாதேவியின் நடத்தையில் கடந்த சில நாட்களாக பசப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. வேறு ஒரு வாலிபருடன், மாதேவிக்கு ரகசியமாக கள்ளக்காதல் இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசப்பா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாதேவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பசப்பா, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே அந்த வழியாக சென்ற கிராம மக்கள், மாதேவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அஞ்செட்டி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் மாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே 2-வது மனைவியை கொலை செய்த பசப்பாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மேல்கொச்சாவூர் வனப்பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் பசப்பா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பசப்பா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் தேரோட்ட விழாவையொட்டி பல்லக்கு உற்சவம் நடந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசந்திரசூடேஸ்வர் கோவில் தேரோட்ட விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து பல்லக்கு உற்சவம்,தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மின்வாரியம், நகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், ஒவ்வொரு நாள் இரவில் பல்லக்கு உற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று ஓசூர் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் பல்லக்கு உற்சவம் நடந்தது. தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், உற்சவமூர்த்தியை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வைத்து, மேள, தாளத்துடன் நகர் முழுவதும் வீதி உலா நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்களும், நாராயணன், சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஆட்டை வேட்டையாடியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காப்புக்காடு வனப்பகுதியில் சட்ட விரோதமாக வேட்டையில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக வனத்துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனக்காவலர்கள் காட்டில் ரோந்து சென்றனர்.
அப்போது காப்பு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த சாம்பசிவம் (வயது45), சண்முகம்(55) ஆகிய இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் இருவரில் சண்முகம் கைது செய்யப்பட்ட நிலையில் சாம்பசிவம் தப்பி ஓடிவிட்டார். அவரை வனக்காவலர்கள் தேடி வருகின்றனர்.
ஆட்டை வேட்டையாட பயன்படுத்திய கம்பி சுருள் கத்தி போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். வனத் துறையினர் வேட்டையாடிக் கொன்ற ஆட்டையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜமேதார் மேட்டை சேர்ந்தவர் மகேந்திரன். வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
இன்று காலை இவரின் மனைவி வழக்கம் போல் பால் ஊற்றுவதற்காக சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில் மகேந்திரன் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவேரிப்பட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நாயை அடித்து கொன்ற தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமம் அருகே உள்ள வேலன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மனைவி புவனேஸ்வரி வயது (வயது40). நேற்று அருகாமையில் உள்ள நீப்பத்துறை காப்புக்காடு ஓரத்தில் கொட்டகை அமைப்பதில் புவனேஸ்வரி மற்றும் மகாலட்சுமி இருவருக்கும், காசிநாதன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த காசிநாதன், புவனேஸ்வரி வளர்த்து வந்த வளர்ப்பு நாயை அவர்கள் கண்முன்னே அடித்து கொன்றுள்ளார்.
இது குறித்து புவனேஸ்வரி சிங்காரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நாயை அடித்து கொன்ற காசிநாதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் காலை முதலே வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. நேற்று மாலை திடீரென கருமேகம் திரண்டு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சாலை யோரம் இருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் காற்றில் தூக்கி வீசப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.