என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    கிருஷ்ணகிரியில் 1200 கிலோ ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்றுமுன்தினம் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்&இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். 

    அப்போது கிருஷ்ணகிரியில், திருவண்ணாமலை சாலை, ராசுவீதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 50 கிலோ அளவிலான, 24 மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. விசாரணையில் அந்த வீட்டில் குடியிருக்கும் பாலாஜி(வயது34) என்பவர் அப்பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வைத்திருப்பதும், அதனை பாலீஷ் செய்து கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×