என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த ஜமேதார் மேட்டை சேர்ந்தவர் மகேந்திரன். வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.  

    இன்று காலை இவரின் மனைவி வழக்கம் போல் பால் ஊற்றுவதற்காக சென்றுவிட்டார். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கிணற்றில்  மகேந்திரன் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

     உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவேரிப்பட்டணம்  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்  போலீசார் விரைந்து வந்து மகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் 
    Next Story
    ×