என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பெண் தீக்குளித்து தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மாரங்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி கலைவாணி.

     இந்த நிலையில் கணவன்& மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது கூறப்படுகிறது. இதில்  மனமுடைந்த கலைவாணி வீட்டில் இருந்த மண்ணென்யை உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டு அலறினார். இதையறிந்த உறவினர்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×