என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சாலையில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    • 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகுமார். இவரது மனைவி ஆஷா (எ) அகிலா (32).

    இவர் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் ஒரு முகவரியை கொடுத்து விசாரிப்பது போல நடித்துள்ளனர்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் அகிலா அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து அகிலா தந்த புகாரின்பேரில் மகாராஜாக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • தாய்-மகள் இருவரையும் கடத்தல்.
    • வாலிபர் மீது கணவர் புகார் கொடுத்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு யாமினி என்ற 12 வயது மகள் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சத்யாவையும், யாமினியையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்காததால் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அந்தோணி புகார் செய்தார். அந்த புகாரில் பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்த ராகவன் என்ற வாலிபர்தான் தனது மனைவியையும், மகளையும் கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • தி.மு.க.வினரின் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
    • 500-க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

    ஓசூர்,

    தி.மு.க.வின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்ட ஒசூர் ஒன்றியம் உள்பட ஒன்றியத்திற்கான 15-வது உட்கட்சி தேர்தலில், அவைத்தலைவர், ஒன்றிய செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோருக்கு, விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, ஓசூரில் தளி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், தலைமை கழக ஆணையாளர் சூர்யா வெற்றிகொண்டான் ஆகியோர் தலைமை தாங்கி, விண்ணப்ப படிவங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், 500-க்கும் மேற்பட்டோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

    மேலும் இதில், மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா,மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திட்டபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், பள்ளி களுக்கு இருப்பறையுடன் உள்ள சத்துணவு மையம் கட்டும் திட்டம், 15-வது நிதிக்குழு மாநில திட்டப் பணிகள், சுகாதாரம், குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அதனடிப்படையில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் ஒருங்கி ணைந்து திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர். 

    • வளாகத் தேர்வில் தேர்வான 479 மாணவர்களுக்கு பணி ஆணைக் கடிதங்களை வழங்கியுள்ளனர்.
    • கணிதத் துறைத் தலைவர்கள் ராகவன், சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலர் சந்திரசேகரன் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வளாகத் தேர்வில் தேர்வான 479 மாணவர்களுக்கு பணி ஆணைக் கடிதங்களை வழங்கி தலைமை உரையாற்றினார்.

    கல்லூரியின் முதல்வர் பாலசுப்பி ரமணியன் துணை முதல்வர் குணசேகரன் மற்றும் கணிதத் துறைத் தலைவர்கள் ராகவன், சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் வளாகத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரகாஷ் வரவேற்றார், கல்லூரியின் வளாகத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இயற்பியல் துறைப் பேராசிரியர் தம்பிதுரை வேலைவாய்ப்பு சாதனையாளர் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    • 6-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டம் முழுவதையும் மிதித்து துவம்சம் செய்தது.
    • பீர்க்கங்காய் தோட்டங்கள் தென்னை மரங்கள், வாழை மரங்கள், தக்காளி செடிகளை என அனைத்தையும் புகுந்து செடிகளின் மிதித்து நாசம் செய்துள்ளது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று வருடங்களாக இப்பகுதியில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    இந்த காட்டு யானைகள் கொங்கனபள்ளி சிகரளபள்ளி, நேர்லகிரி, எப்ரி வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளி வந்த 6-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அதிகாலை தோட்டகவாய் கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து வாழை தோட்டம் முழுவதையும் மிதித்து துவம்சம் செய்தது.

    மேலும் அருகே உள்ள சுப்பிரமணி மற்றும் கோபால் என்பவருடைய பீர்க்கங்காய் தோட்டங்கள் தென்னை மரங்கள், வாழை மரங்கள், தக்காளி செடிகளை என அனைத்தையும் புகுந்து செடிகளின் மிதித்து நாசம் செய்துள்ளது.

    இந்த காட்டு யானைகளால் இப்பகுதியில் சுமார் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய பயிர்களை மிதித்து துவம்சம் செய்து சென்றுள்ளது.

    தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால் இப்பகுதி விவசாய நிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து வருகின்றனர்.

    இந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தினமும் காட்டு யானைகள் இரவில் அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் பீதியில் உள்ளனர்.

    • சொந்த நிதியில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்மோட்டார் அறை அமைக்கும் பணி.
    • பூமி பூஜை செய்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கல்லுகான்கொட்டாய் கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் ராட்சத கிணறு வெட்டப்பட்டுள்ளது.

    இங்கிருந்து மின்மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கவுரிபுரம் ஏரி, பாரா கிணறு, துபாஷ் கிணறு, நாகிசெட்டி ஏரி, கம்மநாயக்கன் ஏரி, வஜ்ரபள்ளம் ஏரி மற்றும் மேட அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட சஜ்ஜலப்பட்டி ஏரி, கொப்பகரை ஏரிகளில் நிரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கல்லுகான்கொட்டாய் அருகே உள்ள கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் திறந்த நிலையில் இருந்ததால் அது பாழாகும் நிலை உருவானது. இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தனது சொந்த நிதியில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்மோட்டார் அறை அமைக்கும் பணியை நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

    இதில் கிழக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் கெலமங்கலம்முருகன், சூளகிரி பாலசுப்பிரமணி, வேப்பனப்பள்ளி சைலேஷ்கிருஷ்ணன், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணி, புருசப்பன், அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், கொப்ப கரை ஊராட்சி மன்றத் தலைவர் அர்சுணன், துணைசெயலாளர் முனிசாமி, மகளிர் அணி கங்கம்மா உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.

    • தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மகள் தற்கொலை செய்த பரிதாபம்.
    • இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஓசூர்,

    ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி சித்ரா (28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    கடந்த 7-ந் தேதி, சித்ரா வேலையை முடித்து, இரவு தாமதமாக வீட்டு வந்தாராம். இதனை அவரது தாயார் கலா கண்டித்து கேட்டுள்ளார்.

    இதனால் வேதனையடைந்த சித்ரா, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பாகலூர் ஊராட்சி தலைவர்ஜெயராமன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.5.82 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.

    ஓசூர்,

    ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சிக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் ரூ.5.82 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, பாகலூர் ஊராட்சி தலைவர்ஜெயராமன் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை எடுத்து வண்டியின் மீது தெளித்து கொளுத்தினார்.
    • அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பைக்கை கொளுத்தியுள்ளார்.

    தருமபுரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள அரசம்பட்டி காவாகட்டியூரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் மூர்த்தி (வயது22).

    இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஊருக்கு வந்த மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரிக்கு வந்துள்ளார். பின்னர் பஸ் நிலைய பகுதியில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீண்டும் ஊருக்கு கிளம்பிய மூர்த்தி மதிகோன்பாளையம் அருகேயுள்ள எஸ்.கொட்டாவூர் என்கிற பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை எடுத்து வண்டியின் மீது தெளித்து கொளுத்தினார். இதில் அவரது வாகனம் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இது குறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் இது பற்றி போலீசார் மூர்த்தியிடம் விசாரித்த போது மதுபோதையில் வண்டிக்கு தீ வைத்ததாக கூறினார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடந்த 2 மாதத்தில் 40 பேரை கைது செய்துள்ளனர்.
    • 287 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் மூலம் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 287 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு வனப்பகுதியையொட்டி கொட்டி போலீசார் அழித்தனர். மதுபானங்கள் அழிக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட த்திற்கு கள்ளத்தனமாக மதுபானங்கள் வருவதை தடுத்து வருகிறோம். அடுத்த மாதம் 44 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் ஏலம் விடப்படும். இல்லாவிட்டால் அழிக்கப்படும். புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த 2 மாதத்தில் 40 பேரை கைது செய்துள்ளோம். 13 குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளோம். தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம் செய்வோரை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொது மக்களுக்கு நேரிடையாக மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
    • பண்ணையில் ஜூஸ் வகைகள் முள்ளங்கி, சுரைக்காய், கத்தரி போன்ற காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளான மாதுளை, சப்போட்டா, வாழை போன்ற பயிர்கள் இயற்கை உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரதில் அரசு சார்பில் தோட்டக்கலைத் துறையின் பழத்தோட்டம் உள்ளது. இந்த பழத்தோட்டம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இதில் 10 ஏக்கர் அளவில் மா உற்பத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 36 வகையான மா மரங்கள் செந்தூரா, ரூமேனி, காளபட்டு, நீலம், பெங்களுரா, மல்கோவா உள்பட பல வகையான மாமரங்கள் இயற்கையான உரங்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

    மேலும் இப் பண்ணையில் ஜூஸ் வகைகள் முள்ளங்கி, சுரைக்காய், கத்தரி போன்ற காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளான மாதுளை, சப்போட்டா, வாழை போன்ற பயிர்கள் இயற்கை உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அனைத்து விதமான பழங்கள் காய்கறிகள் கீரைகளை அரசு சார்பில் இறங்கி வரும் டான்ஹோடா நிறுவனம் மூலம் குறைந்த விலையில் நேரடியாக பொதுமக்கள் பயனடைய வகையில் தோட்டக்கலை பண்ணை வாயிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தோட்டக் கலைத்துறை பண்ணை அலுவலர் சுகதேவ் கூறும்போது தற்போது இப்பண்ணையில் விளை யும் அனைத்து விதமான காய்கறிகள் பூக்கள் இயற்கையான உரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பயிரிடப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    முன்பு இங்கு வளரும் விளைபொருட்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டான்ஹோடா நிறு வனம் மூலம் பொது மக்களுக்கு நேரிடையாக மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் அரசுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கிறது. அதே போல் இங்கு விளைநிலங்களுக்கு உயிர் உரங்கள் மற்றும் மா, தென்னை, வாழை, பூ செடி வகைகள், விதைகள் தரமானதாக உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

    இதை பொதுமக்கள் விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அப்போது உடன் உதவி தோட்டக்கலை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட தோட்டக்கலையினர் உடனிருந்தனர். 

    ×