என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே குழந்தையுடன் பெண்ணை கடத்திய வாலிபர்
- தாய்-மகள் இருவரையும் கடத்தல்.
- வாலிபர் மீது கணவர் புகார் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு யாமினி என்ற 12 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற சத்யாவையும், யாமினியையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எவ்வித தகவலும் கிடைக்காததால் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அந்தோணி புகார் செய்தார். அந்த புகாரில் பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்த ராகவன் என்ற வாலிபர்தான் தனது மனைவியையும், மகளையும் கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






