என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடந்த போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரியில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

    • திட்டபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
    • தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், 2021-22ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், பள்ளி களுக்கு இருப்பறையுடன் உள்ள சத்துணவு மையம் கட்டும் திட்டம், 15-வது நிதிக்குழு மாநில திட்டப் பணிகள், சுகாதாரம், குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறார். அதனடிப்படையில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக வீடு வழங்கும் பணிகள், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் ஒருங்கி ணைந்து திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×