என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை அருகே மின்மோட்டார் அறை கட்ட பூமிபூஜை
- சொந்த நிதியில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்மோட்டார் அறை அமைக்கும் பணி.
- பூமி பூஜை செய்து கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கல்லுகான்கொட்டாய் கிராமத்தின் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் ராட்சத கிணறு வெட்டப்பட்டுள்ளது.
இங்கிருந்து மின்மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கவுரிபுரம் ஏரி, பாரா கிணறு, துபாஷ் கிணறு, நாகிசெட்டி ஏரி, கம்மநாயக்கன் ஏரி, வஜ்ரபள்ளம் ஏரி மற்றும் மேட அக்ரஹாரம் ஊராட்சிக்கு உட்பட்ட சஜ்ஜலப்பட்டி ஏரி, கொப்பகரை ஏரிகளில் நிரப்பப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் கல்லுகான்கொட்டாய் அருகே உள்ள கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் திறந்த நிலையில் இருந்ததால் அது பாழாகும் நிலை உருவானது. இப்பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி தனது சொந்த நிதியில் இருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்மோட்டார் அறை அமைக்கும் பணியை நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில் கிழக்கு மாவட்ட பொருளாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் கெலமங்கலம்முருகன், சூளகிரி பாலசுப்பிரமணி, வேப்பனப்பள்ளி சைலேஷ்கிருஷ்ணன், முன்னால் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலாளர் சண்முகம், கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணி, புருசப்பன், அவைத்தலைவர் மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், கொப்ப கரை ஊராட்சி மன்றத் தலைவர் அர்சுணன், துணைசெயலாளர் முனிசாமி, மகளிர் அணி கங்கம்மா உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.






