என் மலர்
கிருஷ்ணகிரி
- பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் வந்த போது சிக்கியுள்ளார்.
- டிராவல்ஸ் பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்,
பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று சிப்காட் போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஜுஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட் ஈடு பட்டுருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, ஒரு பயணி வைத்திருந்த டிராவல்ஸ் பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குட்டைமேடு பகுதியை சேர்ந்த அன்பு என்ற வெங்கடேசன் (40) என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நிறுத்தம்.
- ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணைமின்நிலையத்தில், நாளை (செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பணிகள் மே ற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஓசூர் எம்.ஜி.ரோடு, காமராஜ் காலனி, அண்ணாநகர், ராம்நகர், பேருந்து நிலையம், ஸ்ரீநகர், பிருந்தாவன் நகர், நரசிம்மா காலனி, அலசநத்தம், நியூ அட்கோ, அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், கொத்தூர்,ஆனந்தா நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், சாந்தபுரம், பாலாஜி நகர் ( சின்ன எலசகிரி), சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், அசோக் லேலண்ட் - 1, சூர்யா நகர், அரசனட்டி, டி.வி.எஸ்.நகர், சிவகுமார் நகர், அந்திவாடி, மத்திகிரி, குதிரே பாளையம், காடிபாளையம், டைட்டான் டவுன்சிப், பழைய மத்திகிரி, எடயநல்லூர், கொத்தகொண்டபள்ளி, பொம்மண்டபள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைதான அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி யின்றி மதுவிற்றதாக கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது45), பாலசுப்பிரமணி (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான அவர்களை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
- சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் விகாஸ் நகர் பகுதியில் வித்யா கணபதி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்களுடன் தொடங்கியது.
தொடர்ந்து, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் மாநகர எஸ்.ஏ.சத்யா கலந்து கொண்டார். மாநகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்தது.
- தூர்வாரும் பணியை நகராட்சி தலைவர் பரிதாநவாப் பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்த புகார்கள் நகர்மன்ற தலைவருக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், நகராட்சிக்குட்பட்ட 4, 5, 6, 19 மற்றும் 27-வது வார்டுகளில் மழை நீர் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியினை துரித கதியில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து நகராட்சி பொறியாளர் சரவணன் மற்றும் நகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் ஆய்வாளர்களை குழுவாக அமைத்து, நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரம், டிராக்டர்களை கொண்டு கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த பணியின் போது நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து தினமும் காலை 6 மணிக்கு வார்டுகளுக்கு செல்லும் நகர்மன்ற தலைவர், துப்புரவு பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
மேலும், நகராட்சி பகுதியில் எங்கும் குப்பைகள் தேங்க விடாமல், உடனுக்குடன் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார்.
- நற்கருணை ஆராதனையும் செய்து, இறை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
- நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வலம் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி சாந்தி நகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், நேற்று மாலை முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நடைபெற்றது.
பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வ லமாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் அமைக்கப்பட்டிருந்த, இரண்டாவது மேடைக்கு கொண்டுவந்து, அங்கும் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பங்குத்தந்தை இசையாஸ், உலக நன்மைக்காவும், சமாதானத்திற்காகவும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறை மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
இந்த சிறப்பு நற்கருணை பவனி மற்றும் ஆராதனையில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- தினமும் 100 கிலோ மீன்கள் பிடிக்கப்படும் சனி ஞாயிறுகளில் 2 டன் அளவுள்ள மீன்கள் ஏரியிலிருந்து பிடித்து விற்பனை ஆவதாக தெரிகிறது.
- ஏரிக்கு வரும் வழியில் தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீர் முறையாக சுத்தம் செய்யாமல் அப்படியே ஏரியில் கலக்க விடுகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் வண்ணாங் குட்டை ஏரி உள்ளது இது 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ரோகு, கட்லா, மெர்க்கால், ஜிலேபி, உள்ளிட்ட மீன்வகைகள் ஏரியில் வளர்க்கப்படுகிறது.
தினமும் 100 கிலோ மீன்கள் பிடிக்கப்படும் சனி ஞாயிறுகளில் 2 டன் அளவுள்ள மீன்கள் ஏரியிலிருந்து பிடித்து விற்பனை ஆவதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியில் அதிகளவு மீன்கள் செத்து போய் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடிவதில்லை. தூங்க முடியவில்லை. துர்நாற்றம் அதிக அளவில் இருந்ததால் எதை சாப்பிட்டாலும் அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளனர். இதனையடுத்து ஏரியின் மீன்பிடி குத்தகைதாரரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தற்போது தண்ணீர் மாசடைந்து உள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக ஏரிக்கு வரும் தண்ணீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.
ஏரிக்கு வரும் வழியில் தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீர் முறையாக சுத்தம் செய்யாமல் அப்படியே ஏரியில் கலக்க விடுகின்றனர். ஏரி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. ஏரியில் அமோனியா வாயு மிக அதிக அளவில் கலந்துள்ளது. ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் மிக குறைந்த அளவு காணப்படுவதால் மீன்கள் சுவாசிக்கும் தன்மை குறைந்து வருவதால் மீன்கள் அதிக அளவு இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது .
அமோனியா வாயு வெளியேறி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடும் இருந்தாலும் மழை அதிக அளவு பொழிந்தால் மட்டுமே ஏரியில் உள்ள மீன்களை காப்பாற்ற முடியும். இதனால் நாங்களும் நஷ்டம் அடைந்துள்ளோம்என தெரிவித்தார்.
மேலும் இந்த ஏரியில் இருந்து போர் அமைத்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கின்றனர். அந்த தண்ணீரும் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த ஏரியிலிருந்து செல்லும் தண்ணீர் மேலும் மூன்று ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஏரியில் செத்துக் கிடக்கும் மீன்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
- கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
ஓசூர்,
தர்மபுரி மாவட்டம் தலவாஹள்ளியை சேர்ந்தவர் வல்லரசு (22). இவர், ஓசூர் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த 17 வயது உறவுக்கார பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி, பாரதியார்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வல்லரசு மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மேம்படுத்தல் பணிகளின் தரம், அளவு மற்றும் இதர தர கட்டுப்பாடு அளவுகளை நேரில் ஆய்வு.
- சென்னை நெடுஞ்சாலை இயக்குநர் கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட் கோட்டத்தில் நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சென்னை நெடுஞ்சாலை இயக்குநர் கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் ராயக்கோட்டை டு அத்திப்பள்ளி சாலை மற்றும் யூபுரம் சாலைகளை பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளின் தரம், அளவு மற்றும் இதர தர கட்டுப்பாடு அளவுகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
- முன்விரோதம் காரணமாக கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- கூலி தொழிலாளியை கொலை செய்து விட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள தொட்ட பேளூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கண்ணா இவரது மகன் லகுமப்பா (வயது40). கூலி தொழி லாளி. இவரது சகோதரர் முனியப்பா (45).
தந்தையும், மகன் முனியப்பாவும் தனிதனியே மாடுகள் வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தந்தை என்பவரது மாடு பண்டிகைகளில் சரியாக ஓடவில்லை எனவும், எனவே தனது அண்ணனிடம் தனது மாட்டிற்கு நீதான் செய்வினை செய்து வைத்து விட்டாய் என்று கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லகுமப்பா பிரச்சனை செய்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் முனியப்பா என்பவருக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (32), சதீஷ் (22), விஜய் (25) ஆகியோர் பேசியுள்ளனர்.
அப்போது முதல் இரு தரப்பினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்றிரவு லகுமப்பா வீட்டின் அருகே மதுபோதையில் நின்று கொண்டு இருந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த அந்த 3 பேரும் அவரிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த தேவராஜ் உள்பட 3 பேரும் சேர்ந்து லகுமப்பாவை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தேவராஜ் உள்பட 3 பேரும் தப்பியோடி விட்டனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிேலயே லகுமப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கூலி தொழிலாளியை கொலை செய்து விட்டு தப்பியோடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- வயிற்றுவலியால் உயிரை மாய்த்த தொழிலாளி.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூர் அருகே உள்ள கீழ்மத்தூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 38). இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது.
மூன்று குழந்தைகள் உள்ளன. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி வயிற்று வலி வந்ததால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு புளியந்தோப்பில் தூக்கில் தொங்கினார்.
இது குறித்த புகாரின்பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரியசூளாமலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா (வயது56). இவர் கனகமுட்லு கிராமத்தை சேர்ந்த கன்னியப்பன் (42) என்பவரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது பேரன் படிப்பிற்காக தனது 30 சென்ட் நிலத்தை கன்னியப்பனிடம் கொடுத்து ரூ.10,500 பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் ராதா தனது சொத்தை மீட்க முடியாமல் அவருக்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்தார்.
இதையடுத்து கன்னியப்பன் 4 வருடங்களு க்கு அசலும் வட்டியுமாக 7,50,000 கொடுக்குமாறும் பத்திரத்தில் எழுதி வாங்கிக்கொண்டு அதற்கு மாதம் வட்டி கேட்டு மிரட்டி உள்ளார்.
இதையடுத்து ராதா வேப்பனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கன்னியப்பன் மீது கந்துவட்டி வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






