என் மலர்
கிருஷ்ணகிரி
- கூட்டம், கே.ஆர்.பி., அணை அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நேற்று நடந்தது.
- முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை 6-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து 2022-23-ம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், கே.ஆர்.பி., அணை அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளர் அறிவொளி தலைமையில் நேற்று நடந்தது.
இதில் கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் காளிப்பிரியன், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பரசுராமன், பையூர் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை பேராசிரியர் சிவக்குமார், கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலர் பிரியா, காவேரிப்பட்டணம் வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், நீர்வ ளத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் ஜூலை 6-ந் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீரைத் திறக்க அரக்கு கோரிக்கை வைப்பது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பின் அவற்றினை தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர் வரும் மழை நீரைக் கொண்டு சரிசெய்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், வரப்பு பயிரில் உளுந்து பயிடவும், நெல் தரிசுக்கு பிறகு உளுந்து, காராமணி பயிர் சாகுபடி செய்யவும், உயிர் உரங்கள் மற்றம் நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீத மானியத்தில் கிடைக்கும் எனவும் வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 204 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.
- அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், புகர்கள் குறித்து தொலைபேசி எண்கள் மற்றும் விழிப்புணர்வு கையேடுகளை பயனாளி களுக்கு கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 204 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக பர்கூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கமலா என்பவரின் மகன் சக்தி என்பவர் பாம்பு கடித்து இறந்ததையொட்டி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு திட்டம், அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள், புகர்கள் குறித்து தொலைபேசி எண்கள் மற்றும் விழிப்புணர்வு கையேடுகளை பயனாளி களுக்கு கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் ராஜேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, உதவி திட்ட அலுவலர் ஷகிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
- பள்ளியில் படிக்கும் மாணவிகள் வரும் ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் பல சாதனைகள் புரிய வேண்டும் என கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாட புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் தலைமை தாங்கி பேசுகையில், தனியார் பள்ளிகளை விட சிறந்த கட்டமைப்பு கொண்ட இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் வரும் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் பல சாதனைகள் புரிய வேண்டும் என கூறி வாழ்த்தினார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவ நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், கவுன்சிலர்கள் செந்தில்குமார், பாலாஜி, தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நபர்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும்.
- தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வருகிற 24-ம் தேதி வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஒருவர் ஒரு கிராம் முதல் நான்காயிரம் கிராம் வரை வாங்கலாம். ஒரு கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.5091 மட்டுமே. தங்கப்பத்திரத்தின் முதலீட்டுக்காலம் 8 ஆண்டுகளாகும். இதன் இறுதி தேதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்புக்கு தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ள லாம்.
அதே வேளையில், தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தினை பணமாக மாற்றி ்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ஆகும். இத்திட்டத்தில் பணம் செலுத்தும் நபர்களுக்கு முதலில் அஞ்சலக ரசீதும், 20 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர ஆதார் எண், பான்எண், வங்கிக் கணக்கு ஆகியவை மிகவும் அவசியம் ஆகும். தங்கப்பத்திரங்களை வைத்து பணம் தேவைப்படும் போது வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பொது மக்கள் அனை வரும் இந்த தங்கப்பத்திரத் திட்டத்தில் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
- தி.மு.க. செயலாளராக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ஜி.எம்.சி.சின்னராஜ் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்த ஜி.எம்.சி.சின்னராஜ் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார்.
நேற்று கட்சி முன்னோடிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துப்பெற்றார். அதன் பின் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால், ஒன்றிய அவைத்தலைவர் ஜெயராமன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் முருகன், ராமி குணசேகரன், அருணாகிரி, பொருளார் பி.முருகன், பொறியாளர் அணி பெரியசாமி, குமரேசன், மாதேஷ், மாவட்ட பிரதிநிதிகள் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டார்கள்.
- வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் நடக்கிறது.
- கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து பயன் பெற இந்த பயிற்சி மையத்தை இங்கு தொடங்கி இருக்கிறார்கள்.
- கல்வியில் முன்னேறிய மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி, வேலை வாய்ப்பிலும் முன்னேறிய மாவட்டமாக விளங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியுடன் இணைந்து வேராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் சார்பில், கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகர் முதல் கிராசில் வங்கி, அரசு பணிக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகருமான் தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, புதியதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்வதற்காகவும், வங்கி பணி, அரசு பணிக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும் இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வங்கி பணி, டி.என்.பி.எஸ்.சி., மத்திய அரசு பணிக்கான சிறந்த பயிற்சி அளித்து வரும் வேரண்டா ரேஸ் நிறுவனம், கிருஷ்ணகிரி பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து பயன் பெற இந்த பயிற்சி மையத்தை இங்கு தொடங்கி இருக்கிறார்கள். கல்வியில் முன்னேறிய மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி, வேலை வாய்ப்பிலும் முன்னேறிய மாவட்டமாக விளங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சென்னை லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர்.லாஸ்யா, பீல்டு போர்ஸ் துணை தலைவர் சிவக்குமார், தலைமை விற்பனை அலுவலர் பிரவீன் மேனன், வேரண்டா ரேஸ் மைய அதிகாரிகள் பரத் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ.,ராஜேந்திரன், பர்கூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபால், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, வெற்றிச்செல்வன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் தனபால் செய்திருந்தார்.
- சிப்காட்-போச்சம்பள்ளி, கல்லாவி துணை மின்நிலை யங்களில் நாளை 21-ந்தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட சிப்காட்-போச்சம்பள்ளி, கல்லாவி துணை மின்நிலை யங்களில் நாளை 21-ந்தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் சிப்காட்-போச்சம்பள்ளி துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் கிராமங்கள் மற்றும் கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கெரிகபள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரபட்டி, பணமரத்துப்பட்டி, சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் கலந்து கொண்டார்.
- ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி எம்பி.யின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் ரமகத்துல்லா தலைமை தாங்கினார்.
நகர தலைவர் லலித்ஆண்டனி, மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர்.தகி, மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, ராகுல் பேரவை தலைவர் குட்டி(எ)விஜயராஜ், ஷனவாஸ், அஜிஸ்சுல்லா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதாம், கவியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கோபிநாத் பங்கேற்று, ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆஜித் பாஷா நன்றி கூறினார்.
- கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
- காரை கைப்பற்றி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர்.
வேப்பன ஹள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கங்கமடுகு கிராமத்தின் அருகே சாலை ஓரத்தில் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் கார் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வேப்பனப்பள்ளி போலீசார் காரை கைப்பற்றி காவல் நிலையத்தில் கொண்டு வந்தனர்.
பின்னர் இந்த கார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பைக் திருடிய வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- அவரிடம் இருந்து பைக் மற்றும் 10 ஆயிரம் மதிப்பு வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பாலேதோட்டம் பகுதியில் இருசக்கர வாகனம், மின்மோட்டார் வயர்கள் ஆகியவை அடிக்கடி திருடு போனது. இது பற்றி பொதுமக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று திருடனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்றிரவு அதே பகுதியில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி கொண்டிருந்தார். இதனை பார்த்த ஒருவர் ஓடி வந்து அந்த நபரை பிடித்தார்.
பின்னர் அவர் கூச்சலிட்டதால் அருகில் இருந்த பொதுமக்கள் வந்து திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரிடம் இருந்து பைக் மற்றும் 10 ஆயிரம் மதிப்பு வயர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த திருடனை பிடித்து போச்சம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கருடனூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது28) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் விலையுயர்ந்த மின்மோட்டார் வயர்களை திருடியது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
- பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பர்கூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பர்கூர் மல்லப்பாடியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ராகுல்காந்தி நலமுடன் வாழ வேண்டியும், சோனியாகாந்தி உடல் நலம் குணமடைய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதில் அம்மனுக்கு பன்னீர், குங்கும அபிஷேகம் நடந்தன. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, வக்கீல் அசோகன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஜாக்கப், நஞ்சுண்டன், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் நகர செயலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளியில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கு வட்டார தலைவர் மின்டிரி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் காசிலிங்கம், மாவட்ட பொது செயலாளர் மடத்தானூர் ஆறுமுகம், ராகுல் பேரவை சிவலிங்கம், மாவட்ட செயலாளர் நாகராஜ், போச்சம்பள்ளி முனிராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். மாதேப்பட்டி முருகன் கோவிலில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சக்திவேலன், மாதேப்பட்டி அர்ச்சுணன், வட்டார தலைவர் மதியழகன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல சூரன்குட்டை ஸ்வர்ணாகர்ஷன பைரவர் கோவில், கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரை காலபைரவர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.






