என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி அகாடமி சார்பில் வங்கி,  அரசு பணிக்கான பயிற்சி மையம்-  தம்பிதுரை எம்.பி. திறந்து வைத்தார்
    X

    வேளாங்கண்ணி அகாடமி சார்பில் வங்கி, அரசு பணிக்கான பயிற்சி மையம்- தம்பிதுரை எம்.பி. திறந்து வைத்தார்

    • கிருஷ்ணகிரி பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து பயன் பெற இந்த பயிற்சி மையத்தை இங்கு தொடங்கி இருக்கிறார்கள்.
    • கல்வியில் முன்னேறிய மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி, வேலை வாய்ப்பிலும் முன்னேறிய மாவட்டமாக விளங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியுடன் இணைந்து வேராண்டா ரேஸ் பயிற்சி மையத்தின் சார்பில், கிருஷ்ணகிரியில் ஜக்கப்பன் நகர் முதல் கிராசில் வங்கி, அரசு பணிக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற துணை சபாநாயகருமான் தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து, புதியதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை விண்ணப்பங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர்கள் போட்டி தேர்வுகளை எதிர் கொள்வதற்காகவும், வங்கி பணி, அரசு பணிக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்காகவும் இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. வங்கி பணி, டி.என்.பி.எஸ்.சி., மத்திய அரசு பணிக்கான சிறந்த பயிற்சி அளித்து வரும் வேரண்டா ரேஸ் நிறுவனம், கிருஷ்ணகிரி பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து பயன் பெற இந்த பயிற்சி மையத்தை இங்கு தொடங்கி இருக்கிறார்கள். கல்வியில் முன்னேறிய மாவட்டமாக உள்ள கிருஷ்ணகிரி, வேலை வாய்ப்பிலும் முன்னேறிய மாவட்டமாக விளங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சென்னை லட்சுமி சரஸ்வதி கல்வி அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர்.லாஸ்யா, பீல்டு போர்ஸ் துணை தலைவர் சிவக்குமார், தலைமை விற்பனை அலுவலர் பிரவீன் மேனன், வேரண்டா ரேஸ் மைய அதிகாரிகள் பரத் சீமான் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ.,ராஜேந்திரன், பர்கூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபால், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, வெற்றிச்செல்வன், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் தனபால் செய்திருந்தார்.

    Next Story
    ×