என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை பகுதியில் நெடுஞ்சாலை பணிகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
ராயக்கோட்டை பகுதியில் நெடுஞ்சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு
- மேம்படுத்தல் பணிகளின் தரம், அளவு மற்றும் இதர தர கட்டுப்பாடு அளவுகளை நேரில் ஆய்வு.
- சென்னை நெடுஞ்சாலை இயக்குநர் கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட் கோட்டத்தில் நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் நடைப்பெற்று வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சென்னை நெடுஞ்சாலை இயக்குநர் கோதண்டராமன் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் ராயக்கோட்டை டு அத்திப்பள்ளி சாலை மற்றும் யூபுரம் சாலைகளை பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளின் தரம், அளவு மற்றும் இதர தர கட்டுப்பாடு அளவுகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story






