என் மலர்
கிருஷ்ணகிரி
- 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார்.
- அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணகிரி,
திருச்சியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவர் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் மருத்துவமனையில் பணியில் இருந்த பொது அங்கு வந்த ஒரு வாலிபர் பிரவீன் வைத்திருந்த விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றார். பிரவீன் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அர்ஜுன் சம்பத் உருவ படத்தை கிழித்தெறிந்து தீயிட்டு எரித்தனர்.
சூளகிரி,
சூளகிரி ரவுண்டானாவில் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து மத மோதலை உருவாக்கும் வகையில் ஆபாசமாக பேசி விமர்சித்து வருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவத்ததுடன், தமிழக அரசு அர்ஜுன் சம்பத்தை கைது செய்ய வேண்டுமென முழக்கங்களை எழுப்பி, அர்ஜுன் சம்பத் உருவ படத்தை கிழித்தெறிந்து தீயிட்டு எரித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலிசார் விரைந்து வந்து தடுத்தனர்.
- பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கூடாது.
- நோய் இல்லா தமிழ் மாநிலமாக மாற்றலாம் என்று அனைத்து வியாபாரி களுக்கும் அறிவுறுத்தப் பட்டது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாரவளர்ச்சி அலுவலகத்தில் பி.டி.ஒ.சிவக்குமார் தலைமையில் , பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க கூடாது.
காசநோய், புற்றுநோய், சுகாதார சீர்கேடு வருவதால் அதை மாற்றி அதற்கு பதிலாக துணிப்பைகளை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி துணிப்பைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தால் நோய் இல்லா தமிழ் மாநிலமாக மாற்றலாம் என்று அனைத்து வியாபாரி களுக்கும் அறிவுறுத்தப் பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி ஊராட்சி மற்ற தலைவர் கலைசெல்வி ராமன், துணை பி.டி.ஒ.க்கள் உமா சங்கர், முகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மஞ்சுநாத் என்ற வாலிபர் பேரிகை-தீர்த்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
- வாகனம் மோதிவிட்டு சென்றதில் தீபக்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கேரளா மாநிலத்தை சேர்ந்த சாகுல் அஹமது (28) என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
இது குறித்து அவரது மாமா ஜலால் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தீபக்குமார்(25) என்ற வாலிபர் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் கிரானைட் கம்பனி அருகேயுள்ள பிரிவு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதிவிட்டு சென்றதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தாய் தேவி தந்த புகாரின்பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுநாத்(20) என்ற வாலிபர் பேரிகை-தீர்த்தம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- மனமுடைந்த சின்னசாமி 3-ந்தேதி அன்று விஷம் குடித்துவிட்டார்.
- டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் அருகேயுள்ள கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(36). இவருக்கு கடன் தொல்லை அதிகமா இருந்துள்ளது.இதில் மனமுடைந்த சின்னசாமி 3-ந்தேதி அன்று விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவ்ரதுமனைவி சுந்தரம்மாள் தந்த புகாரின்பேரில்கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 3 வரும் இதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தி லுள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், வட்டார இயக்க மேலாளர் -1, வட்டார ஒருங்கிணைப்பாளர்-11 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் மேற்படிப்புடன் அடிப்படை கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 3 வரும் இதே துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் மற்றும் அடிப்படை கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 வருடம் இந்த துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காலி பணியிடம் உள்ள வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்ப படிவம் கிருஷ்ணகிரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திலும் மற்றும் 10 வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
மேற்காணும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், எண்.106, இரண்டாம் தளம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வருகிற 11-ம் தேதிக்குள் கல்வித்தகுதி மற்றும் முன் அனுபவம் தொடர்பான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
- ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம கும்பல் திருடிச்சென்றது.
- 3 பேரையும் கைது செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
சூளகிரி,
சூளகிரி அருகேயுள்ள பேரிகையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது.
கடந்த மாதம் 26-ந்தேதி இந்த அலுவலகத்தில் பணியில் இருந்த முனியப்பன், நவாஸ் ஆகிய 2 பேரையும் அறையில் அடைத்துவிட்டு மின்வாரிய அலுவலகத்தில் இருந் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம கும்பல் திருடிச்சென்றது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி முருகன் தந்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த அண்ணன் ,தம்பிகளான வேலு(27), சரவணன்(22), மற்றும் உத்தனப்பள்ளியை சேர்ந்த நவீன்(22) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
- 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
- ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து ஓசூரில் புத்தக கண்காட்சியை நடத்துகின்றன.
ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள ஓட்டல் ஹில்ஸ் வளாகத்தில், வருகிற 8-ந்தேதி தொடங்கி 19-ம் தேதி வரை 12 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்களும், அறிவியல் இயக்க மற்றும் புத்தக கண்காட்சி பொறுப்பாளர்களும் உடன் இருந்தனர்.
- குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
- மேலும் 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.
ஓசூர்,
ஓசூர் டவுன் போலீசார், தளி ரோட்டில் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 25,000- மதிப்புள்ள குட்கா பொருட்கள் 142 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை, பெங்களூரி லிருந்து திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி பகுதிக்கு காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து, காரையும், குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் ஆதவன் (25) என்பவரை கைது செய்தனர்.
மேலும் தலைமறை வாகிவிட்ட வந்தவாசி பகுதியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சஞ்சய், சூரியா, சரத் ஆகிய 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.
- சிகிச்சை பலனின்றி குழந்தை உமைரா உயிரிழந்த பரிதாபம்.
கிருஷ்ணகிரி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமது. இவர் தற்போது ஓசூரில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
முஸ்தாக் அஹமது தனது 5 வயது குழந்தை உமைராவுடன் மோட்டார் சைக்கிளில் ஓசூர் ரிங் ரோடு பகுதியில் சென்றுள்ளார். அப்போது பின்னல் வந்த லாரி ஒன்று அவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தந்தை, மகள் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு ஒசூர் அரசு மருத்துவனையில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உமைரா உயிரிழந்தது. முஸ்தாக் அஹமது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரதுமனைவி நிஷா(29) தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.
- விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் சாலை வசதி, மின்சார வசதி, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 276 மனுக்களை கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஊத்தங்கரை தாலுகா பெரியதள்ளப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நாகவேணி என்பவர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நலையில் மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்து வருவதாகவும், மாதாந்திர உதவி தொகை பெற்று வந்த தனக்கு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தனக்கு மாதாந்திர உதவி தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தார்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் உடனடியாக மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையும், கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் காசோலையாக வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- செங்கொடி நகரில் ரூ.9.90 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது.
- பெருகோபனப்பள்ளியில் எம்.பி., செல்லக்குமார் காங்கிரஸ் கொடியை ஏற்றினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திகுப்பம் அடுத்த செங்கொடி நகரில் ரூ.9.90 லட்சம் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது.
கந்திகுப்பம் காலபைரவர் கோயில் பைரவ சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.
கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர். செல்லக்குமார், கட்டடம் கட்டுவதற்கான பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், வக்கீல் அசோகன், மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரத்குமார், சேவாதளம் நாகராஜ், பர்கூர் நகர தலைவர் யுவராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் மகிலரசி ஜெயபிரகாஷ், ஜேக்கப் வில்லியம்ஸ், துணைத் தலைவர் மாதம்மாள் சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை பெருகோபனப்பள்ளியில் எம்.பி., செல்லக்குமார் காங்கிரஸ் கொடியை ஏற்றினார். தொடர்ந்து மதியம் எலத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளி கட்டடத்திற்கான பூமி பூஜையும், அங்கிநாயனப்பள்ளி மற்றும் மல்லப்பாடியில் நிழற்கூடம் அமைப்பதற்கான பூமி பூஜையும் செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.






