என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே   மின்வாரிய அலுவலகத்தில் திருடிய 3 பேர் சிக்கினர்
    X

    சூளகிரி அருகே மின்வாரிய அலுவலகத்தில் திருடிய 3 பேர் சிக்கினர்

    • ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம கும்பல் திருடிச்சென்றது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    சூளகிரி,

    சூளகிரி அருகேயுள்ள பேரிகையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது.

    கடந்த மாதம் 26-ந்தேதி இந்த அலுவலகத்தில் பணியில் இருந்த முனியப்பன், நவாஸ் ஆகிய 2 பேரையும் அறையில் அடைத்துவிட்டு மின்வாரிய அலுவலகத்தில் இருந் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம கும்பல் திருடிச்சென்றது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரி முருகன் தந்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.விசாரணையில் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த அண்ணன் ,தம்பிகளான வேலு(27), சரவணன்(22), மற்றும் உத்தனப்பள்ளியை சேர்ந்த நவீன்(22) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×