என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு தலைமை தாங்கினார்.
    • கிருஷ்ணகிரி கலை குழு சார்பாக கலைநிகழ்ச்சிகள் பெற்றது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

    கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய தலைவர் சந்துரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், பட்டியல் அணி மாநில துணைத்தலைவி கஸ்தூரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டனர்.

    கிருஷ்ணகிரி கலை குழு சார்பாக கலைநிகழ்ச்சிகள் பெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்ராஜ் தலைவர் ராஜேஷ்குமார், ஆனந்த், மாவட்ட செயலாளர் வரலட்சுமி, மண்டல தலைவர்கள் சீனிவாஷ், ரவி, செயலாளர் ரூபாஜி, பேராட்சிதலைவர் கோவிந்தப்பா, உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள். முடிவில் பொதுசெயலாளர் மஞ்சுநாத் நன்றி கூறினார்.

    • 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    போச்சம்பள்ளி, கல்லாவி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பாதி, முருக்கம்பட்டி, காரடனூர், சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் இருக்காது.

    கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுபட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சி குப்பம், சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    • கடந்த சில மாதங்களாக வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.
    • இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பாகனூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது30). இவர் கடந்த சில மாதங்களாக வேலை எதற்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த மகேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • முப்பெரும் விழா ஓசூரில் நடைபெற்றது.
    • விழாவிற்கு, ஓசூர் நாராயண தாதா ஆசிரம நிறுவனர் வெங்கடேஸ்வரா சுவாமிஜி தலைமை தாங்கினார்.

    ஓசூர்,

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் மாவட்ட மாநாடு, கல்வி பரிசளிப்பு உள்ள முப்பெரும் விழா ஓசூரில் நடைபெற்றது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, ஓசூர் நாராயண தாதா ஆசிரம நிறுவனர் வெங்கடேஸ்வரா சுவாமிஜி தலைமை தாங்கினார்.

    மாநில துணைத்தலைவர் வக்கீல் முருகேசன் மாநில இணை செயலா ளர்சுந்தர்ராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஓசூர் வட்ட தலைவர் தேவேந்திரன் என்ற குட்டி வரவேற்றார். இதில், சங்கத்தின் மாநில தலைவரும்,மக்கள் தேசிய கட்சியின் மாநில தலைவருமான சேம. நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.

    மேலும் ஓசூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்வாசுதேவன், ஓசூர் அகஸ்தியா வித்யா மந்திர் பள்ளியின் இயக்குனர் பாலசுப்பிரமணியன், வக்கீல் ராம்பிரகாஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினார்.

    விழாவின்போது பத்மஸ்ரீ விருது பெற்ற புதுச்சேரியை சேர்ந்த மண்பாண்ட சிற்பக்கலைஞர் முனுசாமியை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    மேலும், 10- ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்டூவில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், விழாவையொட்டி நடந்த வினாடி வினா நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் குலாலர் சங்க நிர்வாகிகள், குலால சமுதாயத்தினர் திரளாக கலந்துகொண்டனர்.

    முடிவில், ஓசூர் வட்ட செயலாளர் ராமஜோதி நன்றி கூறினார்.

    • இன்று காலை பெங்களூரில் இருந்து வந்த காரைக்கால் ரெயிலுக்கு ஓசூர் ரெயில்நிலையத்தில் வரவேற்பு.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கொரோனா பரவல் அச்சுறுத்தலையொட்டி, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூர் - காரைக்கால் பாசஞ்சர் ெரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமாரின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெங்களூரில் இருந்து வந்த காரைக்கால் ரெயிலுக்கு ஓசூர் ரெயில்நிலையத்தில், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர், கட்சியினர் செல்லகுமார் எம்.பி.யை வாழ்த்தி கோஷமிட்டனர். இதில் துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், பிரபாகரன், மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெரு மாள் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    பர்கூர் ஒன்றியம் பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பாலிநாய னப்பள்ளி கிராமத்தில் 15-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெருமாள் வார்டு மேம்பாட்டு நிதி மூலம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வள்ளி பெரு மாள் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.பி. பெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், ஒன்றிய குழு உறுப்பினர் முரளி, ஒன்றிய குழு முன்னாள் உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் ஊராட்சி செயலாளர் வேணு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமன், வெங்கடசாமி, ஊர் பிரமுகர்கள் தெய்வமணி, கங்காதரன், சண்முகம், ஒப்பந்ததாரர் சர்வேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி.
    • கே.பி.முனுசாமி எம். எல்.ஏ. பூமி பூஜை தொடங்கி வைத்தார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கணம்பட்டி யிலிருந்து கடம்பல்பட்டி வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.1.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை அ.தி.மு.க. மாநில துணை பொதுசெயலாளரும், வேப்பனஅள்ளி சட்டமன்ற உறுப்பினரும்மான கே.பி.முனுசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் முருகன், வேப்பனஅள்ளிஒன்றிய செயலாளர் சைலேஷ்கி ருஷ்ணன், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னால் ஒன்றிய செயலாளர்கிருஷ்ணன், அவைத்தலைவர் மாரிமுத்து, பொருளாளர் மகேஷ்குமார், துணை செயலாளர் முனுசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர்கள் புருசப்பன், துர்வாசன், எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் நாகராஜ், எஸ்.எம்.மணி, ரஜினி குமார், ராஜன்ராவ், முன்னால் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.
    • நீரில் மூழ்கி கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கிரிஷ் (வயது11). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தனது நண்பர்களுடன் அருகே உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற கிரிஷ் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
    • 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் மாலை வரை முகாம் நடந்தது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகள், 333 ஊராட்சி பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் முகாமிற்காக நேற்று ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 930 டோஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று மாலை வரையில் 36 ஆயிரத்து 687 பேர் முதல், 2-வது மற்றும் பூஸ்டர் டோஸ்களும், 12 வயதிற்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    • மாநகர பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மேயர்எஸ்.ஏ. சத்யா மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு ஆனந்தநகர் பகுதியில் உள்ள மாநகர பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில்மேயர்எஸ்.ஏ. சத்யாகலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி பணியாளர்கள், பகுதி மக்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கும்பளம் ஊராட்சிக்குட்பட்ட கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் திப்பையப்பா (வயது42). இவர் கும்பளம் காட்டுபகுதி அருகே ஒரு தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி துளசி.

    இந்த நிலையில் திப்பையப்பா தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் இருந்து தோட்டத்து காவலுக்கு சென்றார்.

    இதையடுத்து இன்றுகாலை திப்பையப்பா தோட்டத்துக்கு செல்லும் பாதையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    முதல் கட்ட விசாரணையில் தலையில் கல்லை போட்டு திப்பையப்பாவை கொலை செய்தது தெரியவந்தது. காட்டுப்பகுதியில் மர்ம பர்கள் இரவு இந்த சம்பவத்தை செய்து இருக்கலாம் என தெரிவித்தனர்.

    இந்த கொலை சம்மந்தமாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தோட்டத்து காவலுக்கு சென்ற காவலாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
    • ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி போலீஸ் சரகம் சின்னகான பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 21). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பவர்க்ரிட் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பாலமுரளியை அக்கம்பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×