என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இந்த திட்டம் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கபட்டு வழங்கினர்.
    • ஆரம்பப ள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்தேகவுடா தலைமையில் நம்ம ஊரு சூப்பரு திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    சிறப்பு விருந்தினராக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், எஸ்.எம்.சி. தலைவர் கனிமொழி பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் அருள்மொழி ,சரவணன் அரசு, உதவி தலைமை ஆசிரியர் ராமசந்திரன், ரங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்கவும், ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், ஆரம்பப ள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இந்த திட்டம் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கபட்டு வழங்கி சூளகிரி ஒன்றியத்தை தமிழகத்திலே சிறந்த சுகாதார ஒன்றியமாக மாற்ற வருங்காலம் சிறக்க மாணவர்களாகிய நீங்களும், பொது மக்களும் இணைந்தாலே போதும் என கூறி பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சப் பை விழிப்புணர்வு எற்படுத்தினர்.

    • வெளியே செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    வேலூர் மாவட்டம் டுறைப்படி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பிரபாகரன் (வயது 34). இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 23-ந்தேதி அன்று அலுவலகத்தில் இருந்து வெளியே செல்வதாக கூறி சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. அவரைப்பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிரபாகரனின் தந்தி ராமலிங்கம் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் தந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ,மாயமான பிரபாகரனை தேடி வருகின்றனர்.

    • பெரியவர் முதல் பள்ளி மாணவர்கள் வரை மலம் கழித்து விட்டு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
    • வீடுகளில் போடும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை தொட்டி வைத்து போட வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி சார்பில் நம்ம ஊறு சூப்பரு, என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு மத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் மீனா சக்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (கி. ஊ) பள்ளி மாணவர்களிடை சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்தும், குப்பைகளை தெருக்களில் அங்காங்கே போடாமல் அதற்காக வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளில் போடுதல் குறித்தும், அதேபோல் வீடுகளில் போடும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து குப்பை தொட்டி வைத்து போடுதல் குறித்தும் அதேபோல் பெரியவர் முதல் பள்ளி மாணவர்கள் வரை மலம் கழித்து விட்டு கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவதல், சுற்றுபுரங்களை சுத்தமாகவும்,சுகாதாரமாக வைத்து கொள்ளுதல் அறவே பிளாஸ்டிக் இல்லா இடமாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் லோகநாயகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தகுமாரி, குறல்வாணி, சங்கரநாரயணன், பள்ளியின் ஆசிரிய ர்கள்,மக்கள் நல பணியா ளர் ராஜா மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.
    • தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொது மக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது.

    கிருஷ்ணகிரி,

    தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெய்த கனமழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செயதார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு வந்துக்கொண்டிருக்கும் 16,250 கனஅடி தண்ணீர், முழுவதும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.

    இதனால், பெரி யமுத்தூர், திம்மாபுரம், சுண்டேகுப்பம், காவேரிப்பட்டணம், கால்வேஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி ஆகிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பொது மக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்க கூடாது என்றும், கால்நடைகளை நீர்நிலை பகுதிகளுக்கு அழைத்து செல்ல கூடாது.

    37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு அமைக்கப்பட்டு அனைத்து தாலுகாவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறி யாளர்கள் அறிவொளி, காளிபிரியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    ஓசூர், 

    ஓசூர் அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 12 வீடுகளுக்குள்,2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முகாம்களுக்கு அழைத்துச் சென்றுதங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், போர்க்கால நடவடிக்கையாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு உள்ள 10 முதல் 12 குடும்பத்தினருக்கு வருவாய் துறை மூலம் வேறு இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும்.

    மேலும் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று வெள்ளம் ஆற்றங்கரையில் ஏற்பட்டதில்லை. தாழ்வான பகுதியில் உள்ளவர்களை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள 150 குடும்பங்களில் பெருமளவு பாதிப்புக்குள்ளான 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அல்லது பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது ஓசூர் சப்- கலெக்டர் . தேன்மொழி, தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, மாநகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னாள்அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விட கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் செலவு செய்தவர் கோவிந்தராஜ்.
    • கிருஷ்ணமூர்த்தி அவர் இருந்த கட்சியில் விசுவாசமாக இல்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளனர்.

    அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளார். இதற்காக அவருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஒரு நாள் கூட முன்னாள் எம்.எல்.ஏ,க்கள் கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஓட்டு சேகரிக்க வரவில்லை.

    முன்னாள்அமைச்சர் கே.பி.முனுசாமியும், நானும் தேர்தலில் வெற்றி பெற்று விட கூடாது என்பதற்காக ரூ.4 கோடி வரையில் செலவு செய்தவர் கோவிந்தராஜ். கட்சிக்கு எதிராக துரோகம் செய்தவர் அவர்.

    அதே போல கிருஷ்ணமூர்த்தி அவர் இருந்த கட்சியில் விசுவாசமாக இல்லை. அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பதவிக்கு வர அனைவரும் கடுமையான உழைக்க வேண்டும். மற்றவர்கள் பதவிக்கு வந்தால் அவர்கள் ஒதுங்கி கொள்வார்கள்.

    கடந்த மூன்றரை ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகளில் எதிலும் அவர்கள் பங்கேற்றது கிடையாது. 12 ஒன்றிய செயலாளர்கள், 2 பேரூர் செயலாளர்கள், நகர செயலாளர், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி வந்த போது எழுச்சியாக மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

    கிருஷ்ணகிரியை பொறுத்தவரையில் கே.பி.முனுசாமி வழிகாட்டுதலில் எடப்பாடி பழனிசாமி பக்கம் அ.தி.மு.க.வினர் ஒரு அணியாக உள்ளனர். 2 ஆயிரம் கிளை கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சமரசம், அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் ஆவின் தலைவர் ெதன்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளது.
    • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பத்தினருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்து பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

    ஓசூர், 

    ஓசூர் அனுமந்த நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள 12 வீடுகளுக்குள், 2 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், அந்த வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு முகாம்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது, போர்க்கால நடவடிக்கையாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டிக்கொண்டு உள்ள 10 முதல் 12 குடும்பத்தினருக்கு வருவாய் துறை மூலம் வேறு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மேலும் கடந்த 20 ஆண்டுகளாக வெள்ளம் ஆற்றங்கரையில் ஏற்பட்டதில்லை. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு,.உடைகள் அளிக்கப்பட்டுள்ளன.

    மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள 150 குடும்பங்களில் பெருமளவு பாதிப்புக்குள்ளான 12 குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் அல்லது பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது ஓசூர் சப்- கலெக்டர் . தேன்மொழி, தாசில்தார் கவாஸ்கர், ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூபதி, மாநகராட்சிப் பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் காவல் துறை,வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றை கடக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது.

    காவேரிப்பட்டினம்,

    கர்நாடக மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1 மணி அளவில் அணையில் 8 மதகுகளிலிருந்து அணைக்கு வந்து கொண்டிருந்தது 16,250 கன அடி நீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனால் பெரிய முத்தூர், திம்மாபுரம், சுண்டே குப்பம், கால்வே அள்ளி, காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், சவுட்ட அள்ளி, தளி அள்ளி, ஆகாய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை முழுவதும் கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமா வருவாய்த் துறை ஆர். ஐ. பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன், காவேரிபட்டினம் செயல் அலுவலர் செந்தில்குமார், இளநிலை உதவியாளர் இளங்கோ,மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றை கடக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது. கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது. ஆற்று ஓரத்தில் நின்று யாரும் செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு செய்தனர்.

    இருப்பினும் காவே ரிப்பட்டணம் பாலத்தின் மீது ஏராளமான புகைப்படங்கள், செல்பிகளும் எடுத்துச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணவேணி விஷம் குடித்து விட்டார்.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள வரட்டனபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 46). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.

    இந்நிலையில் கிருஷ்ணவேணி விஷம் குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • சிலைகளை தயாரித்த பின்னர், அவற்றை மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட கொண்டு சென்றனர்.

    ஓசூர், 

    ஓசூர் அருகே பத்தலப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவ, மாணவியர் ஆண்டுதோறும், விநாயகர் பண்டிகையையொட்டி களிமண்ணில் விதைப்புகளை வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அந்தவகையில், நேற்று பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் களிமண்ணில் விதைப்பந்துகள் வைத்து விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி வழங்கினர். சிலைகளை தயாரித்த பின்னர், அவற்றை மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட சென்றனர். மாணவ, மாணவியரின் இந்த ஈடுபாட்டினை, பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் பாராட்டினர்.

    • இவர் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரச்சொல்லி கேட்டுள்ளார்.
    • அவர் அதற்கு மறுத்து விடவே மனமுடைந்து விஷம் குடித்துவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயியுள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார்.

    இவர் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரச்சொல்லி கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுத்து விடவே மனமுடைந்து விஷம் குடித்துவிட்டார்.

    சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி நிஷா தந்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.
    • விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சந்திரகலா (வயது 36). இவர்களுக்கு 3 மகள்கள்,ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.

    ஆனால் சந்திரகலா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சந்திரகலா தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விஜய்சங்கரை கைது செய்தனர்.

    இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள ஊனாம்பாளையம் பகுதியை சேர்ந்த துரை,ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் நிலத்தகராறு காரணமாக தங்களது உறவுக்கார பெண்ணான சாந்தி என்பவருக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    மனமுடைந்த அவர் பூச்சிமருந்தை குடித்து விட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தியின் கணவர் கிருஷ்ணன் தந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து துரை, ஜெயராமன் 2 பேரையும் கைது செய்தனர்.

    ×