என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து நீர் திறப்பு:  தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய்த் துறை ஆர்.ஐ. பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன்,காவேரிபட்டினம் செயல் அலுவலர் செந்தில்குமார், ஆகியோர் வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரி அணையில் இருந்து நீர் திறப்பு: தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    • கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றை கடக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது.

    காவேரிப்பட்டினம்,

    கர்நாடக மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 1 மணி அளவில் அணையில் 8 மதகுகளிலிருந்து அணைக்கு வந்து கொண்டிருந்தது 16,250 கன அடி நீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டது.

    இதனால் பெரிய முத்தூர், திம்மாபுரம், சுண்டே குப்பம், கால்வே அள்ளி, காவேரிப்பட்டணம், பென்னேஸ்வர மடம், சவுட்ட அள்ளி, தளி அள்ளி, ஆகாய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணகிரி கே. ஆர். பி. அணை முழுவதும் கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டுமா வருவாய்த் துறை ஆர். ஐ. பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன், காவேரிபட்டினம் செயல் அலுவலர் செந்தில்குமார், இளநிலை உதவியாளர் இளங்கோ,மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றை கடக்கவும், குளிக்கவும், துணி துவைக்கவும் கூடாது. கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது. ஆற்று ஓரத்தில் நின்று யாரும் செல்பி எடுக்கக் கூடாது என்று அறிவிப்பு செய்தனர்.

    இருப்பினும் காவே ரிப்பட்டணம் பாலத்தின் மீது ஏராளமான புகைப்படங்கள், செல்பிகளும் எடுத்துச் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×