மத்தூர் அருகே நிலத்தகராறில் விபரீதம்: உறவினர்களால் தொந்தரவுக்கு ஆளான பெண் தற்கொலை முயற்சி

எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்தூர் அருகே நிலத்தகராறில் விபரீதம்: உறவினர்களால் தொந்தரவுக்கு ஆளான பெண் தற்கொலை முயற்சி
Published on

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சந்திரகலா (வயது 36). இவர்களுக்கு 3 மகள்கள்,ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.

ஆனால் சந்திரகலா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சந்திரகலா தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விஜய்சங்கரை கைது செய்தனர்.

இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள ஊனாம்பாளையம் பகுதியை சேர்ந்த துரை,ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் நிலத்தகராறு காரணமாக தங்களது உறவுக்கார பெண்ணான சாந்தி என்பவருக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மனமுடைந்த அவர் பூச்சிமருந்தை குடித்து விட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தியின் கணவர் கிருஷ்ணன் தந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து துரை, ஜெயராமன் 2 பேரையும் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com