என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சார்பில், பழையபேட்டை நேதாஜி சாலையில், டி.எஸ்.பி., தமிழரசி கொடி அணிவகுப்பு ஊர்வலத்தைதொடங்கி வைத்தார்.
    • பர்கூரில் நடந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஏடிஎஸ்பி., சங்கு துவக்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி, பர்கூரில் விநாயகர் சதுர்த்திவிழாவை பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாட போலீசார்அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சார்பில், பழையபேட்டை நேதாஜி சாலையில், டி.எஸ்.பி., தமிழரசி கொடி அணிவகுப்பு ஊர்வலத்தைதொடங்கி வைத்தார்.

    இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டவுன் கபிலன், தாலுகா சரவணன், காவேரிப்பட்டணம் முரளி, குருபரப்பள்ளி சரவணன், மகாராஜகடை பிரகாஷ் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம், பழையபேட்டை, காந்திசாலை, ரவுண்டானா, பழைய சப்ஜெயில் சாலை வழியாக சென்று எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

    இதே போல், பர்கூரில் நடந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஏடிஎஸ்பி., சங்கு துவக்கி வைத்தார்.

    இதில், பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் பர்கூர் சவிதா, பாரூர் ராஜேஷ், போச்சம்பள்ளி பிரபாவதி, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமுதா மற்றும் நாகரசம்பட்டி, கந்திகுப்பம் போலீசார், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.

    கொடி அணிவகுப்பு ஊர்வலம் பஸ் நிலையம் அருகில் தொடங்கி , திருப்பத்தூர் கூட் ரோடு அருகில் நிறைவடைந்தது.

    • இந்த போட்டியில் சேலம், பெங்களுரு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 50 அணிகள் கலந்துக்கொண்டனர்.
    • மூன்றாம் பரிசு ரூ.30,000 எக்காண்டஅள்ளி அணிக்கும், நான்காம் பரிசு ரூ.20,001-கெலமங்கலம்அணிக்கும் வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளு குறுக்கையில் 20-வது ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் சேலம், பெங்களுரு மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 50 அணிகள் கலந்துக்கொண்டனர்.

    முதல் நாள் போட்டியை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் தொடங்கி வைத்தார்.

    மூன்று நாட்கள் நடைப்பெற்ற போட்டியில் முதல் பரிசாக தேன்கனிக்கோட்டை நொகனூர் அணிக்கு ரூ50,001-மற்றும் கோப்பையை ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரிமுத்தன் வழங்கினார்.

    இரண்டாம் பரிசு ரூ.40,001, உள்ளு குறுக்கை அணிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்ததி வழங்கினார். மூன்றாம் பரிசு ரூ.30,000 எக்காண்டஅள்ளி அணிக்கும், நான்காம் பரிசு ரூ.20,001-கெலமங்கலம்அணிக்கும், ஐந்தாம் பரிசு ரூ.15,001-ராயக்கோட்டை அணிக்கும் ஆறாம் பரிசு ரூ.10,001 - செட்டிப்பள்ளி அணிக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை உள்ளு குறுக்கை கிரிக்கெட் டீம் குழுவினர் செய்திருந்தனர்.

    • கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர்.
    • அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நக ராட்சி வார்டு எண்.31 பகுதிக்குட்பட்ட சீனிவாசா காலனி பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் வேலுமணி தலைமையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்ததையொட்டி காலை அந்த சிலைக்கு பூஜை செய்யப்பட்டது. இதற்கான பூஜை பொருட்களை மிலாடி நபி விழாக்குழுவினரும், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலருமான அஸ்லம் தலைமையில், இஸ்லாமிய இளைஞர்கள் பூஜை பொருட்கள் வழங்கினர். பின்னர் அங்கு நடந்த பூஜையில் பங்கேற்று, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தினை தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில், ரியாஸ், ஜாமீர், யஹ்யா, அஷ்ரப், பப்லு, ஜாபர்ஜெலீல், அப்பாஸ், முனீர், ஜுபேர், முன்னா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 12ஆண்டுகளாக நடை பெறும் இந்த நிகழ்ச்சியை பார்த்த இந்து மதத்தினர், இஸ்லாமியர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்ஜெ-யில் சாலையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல், கிருஷ்ண கிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோயிலில் வெண்ணை அலங்காரத்திலும், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்கா ரத்திலும், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்திலும், காந்திநகர் வலம்புரி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சேலம் சாலை ஆதிசக்தி விநா யகர் கோயிலில் வெள்ளிக் கவச அலங்காரத்திலும் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இரண்டு ஆண்டு களுக்கு பிறகு எந்த கட்டுப்பாடுகளுமின்றி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பிரியாவை பாம்பு கடித்து விட்டது.
    • மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மீல் காலனி பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவரது மகள் பிரியா (வயது 24).

    இவருக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த பிரியாவை பாம்பு கடித்து விட்டது. அவரை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சித்ரா தந்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • தங்கையின் வீட்டுக்கு வந்த மசூத் கான் , பானுமதி தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார்.
    • வீட்டுக்குள் புகுந்த மசூத் கான் கத்தியால் அவரை குத்தி காயப்படுத்திவிட்டு பானுமதி அணிந்திருந்த சுமார் இரண்டரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள மல்லப்பாடி பகுதியை சேர்ந்தவர் பானுமதி (வயது 65). இவரது கணவர் ராமதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டார்.

    ஒரே மகளும் திருமணமாகி பெங்களூருவில் வசித்து வருகிறார். எனவே பானுமதி மட்டும் மல்லப்பாடியில் குடியிருந்து வருகிறார். பானுமதியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் யாஸ்மின்.

    இவரது சகோதரர் மசூத் கான் (35). பெங்களூருவில் ஆட்டோ ஒட்டி வருகிறார். தனது தங்கையின் வீட்டுக்கு வந்த மசூத் கான் , பானுமதி தனியாக இருப்பதை நோட்டமிட்டுள்ளார்.

    இதையடுத்து பானுமதியின் வீட்டுக்குள் புகுந்த மசூத் கான் கத்தியால் அவரை குத்தி காயப்படுத்திவிட்டு பானுமதி அணிந்திருந்த சுமார் இரண்டரை பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    கத்தி குத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள பானுமதி தந்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர் மசூத் கானை தேடி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்த அவரை வெள்ளநீர் அடித்து சென்றது.
    • ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 47).விவசாயி.

    இவர் கடந்த 30-ந்தேதி அந்த கிராமத்தின் அருகே காட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தை பார்க்க சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தவறி ஆற்றில் விழுந்துவிட்டார். அவரை வெள்ளநீர் அடித்து சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் மற்றும் ராயக்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாதேசை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய சூளகிரி போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • 500 சிலைகள் 4-ந்தேதி கரைக்கப்படவுள்ளன.

    ஓசூர்,

    ஓசூரில் விநாயகர் சதுர்த்தி பந்தோபஸ்து மற்றும் சிலை ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை அருகே கொடி அணிவகுப்பை, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகூர் தொடங்கிவைத்தார்.

    மேலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையருகே நிறைவடைந்த இந்த அணிவகுப்பினை, அவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.

    முன்னதாக, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விரிவான பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்களும், இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 சிலைகள் வருகிற 3-ந்தேதியும், அதேபோல் சுமார் 500 சிலைகள் 4-ந்தேதியும் கரைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள சிலைகளும் கரைக்கப்படும்.

    விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, 1, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன அதில், ஓசூரில் 2 இடங்கள் பதற்றமான பகுதியாகும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் மற்றும் ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

    • கடந்த ஒரு வாரமாக ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணை நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன.
    • மதகின் இரும்பு ரோப் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீரை நம்பி மூன்றம்பட்டி, பாவக்கல் கொண்டம்பட்டி, நடுப்பட்டி, நாய்க்கனூர், அத்திப்பாடி, கொண்டம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி போன்ற ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் உள்ளனர்.

    அதாவது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 4000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிக்கு இந்த அணையை நம்பியுள்ளன. மேலும் ஊத்தங்கரை பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக பாம்பாறு அணை உள்ளது.

    இந்த அணையின் மொத்தம் 280 மில்லியன் கனஅடி கொள்ளளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியும். அணை உயரம் 19.60 அடி அளவு கொண்டு உள்ளது. அணை மற்றும் ஜவ்வாது மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவது காரணமாக அணையில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அணை நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன.

    நேற்று இரவு பாம்பாறு அணையின் நான்காவது மதகின் இரும்பு ரோப் திடீரென பழுதடைந்தது. இதனால் மதகின் கதவு வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மேலும் பாம்பாறு அணை தண்ணீர் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதியில் யாரும் இருக்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தற்போது மதகின் இரும்பு ரோப் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மின்கசிவு காரணமாக இரும்பு ரோப் கயிருக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்செல்வி பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
    • ஒரு கிணற்றில் தமிழ்செல்வி பிணமாக மிதப்பது தெரியவந்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மகனூர் கட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 26).

    இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்செல்வி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

    அவரை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் தமிழ்செல்வி பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தமிழ்செல்வி பிணமாக மிதப்பது தெரியவந்தது.

    இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தமிழ்செல்வி குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி விமல்கார்த்திக்கின் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
    • அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பீர்தே பள்ளி பகுதியை சேர்ந்தவர் விமல்கார்த்திக் (வயது 23).

    இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி விமல்கார்த்திக்கின் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.

    வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நம்பி விமல்கார்த்திக் தனது கணக்கு தொடர்பான விபரங்களை தெரி வித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விமல்கா ர்த்திக் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் தந்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து பணத்தால் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக கால்வாயில் அவர் தவறி விழுந்தார்.
    • தீயணைப்பு மீட்பு படையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதேசை தேடினர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓசூரில் பெய்த மழையால் அங்குள்ள குடியுருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது.

    இதையடுத்து சூளகிரி அருகே குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேஷ் (வயது 47). அந்த கிராமத்தின் அருகே உள்ள காட்டாற்று வெள்ளத்தை ேநற்று பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் அவர் தவறி விழுந்தார். இதில் அவரை வெள்ளம் அடித்து செல்லப்பட்டது.

    இதனை பார்த்தவர்கள் உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் ராயக்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதேசை தேடினர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை. பின்னர் இன்றுகாலை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்து அமைப்புகளின் சார்பிலும், பொதுமக்கள், பக்தர்கள் சார்பிலும் 160 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதித்துள்ள இடிங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    ஓசூர்,

    இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-டிவிஷனில் 580 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஓசூரில் மட்டும் விசுவ இந்து பரிஷத்,இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பிலும், பொதுமக்கள், பக்தர்கள் சார்பிலும் 160 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் விழாவையொட்டி, ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விநாயகர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதித்துள்ள இடிங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.

    ×