என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினர். உள்படம்: மாதேஷ்.
சூளகிரி அருகே விவசாயியை அடித்து சென்ற காட்டாற்று வெள்ளம்- மீட்பு பணியினர் தேடுதல் வேட்டை
- எதிர்பாராதவிதமாக கால்வாயில் அவர் தவறி விழுந்தார்.
- தீயணைப்பு மீட்பு படையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதேசை தேடினர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓசூரில் பெய்த மழையால் அங்குள்ள குடியுருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்துள்ளது.
இதையடுத்து சூளகிரி அருகே குருபரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதேஷ் (வயது 47). அந்த கிராமத்தின் அருகே உள்ள காட்டாற்று வெள்ளத்தை ேநற்று பார்க்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் அவர் தவறி விழுந்தார். இதில் அவரை வெள்ளம் அடித்து செல்லப்பட்டது.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் ராயக்கோட்டை தீயணைப்பு மீட்பு படையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாதேசை தேடினர். ஆனால் மாலை வரை அவர் கிடைக்கவில்லை. பின்னர் இன்றுகாலை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






