என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வாலிபரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5.11 லட்சம் அபேஸ்
- செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி விமல்கார்த்திக்கின் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
- அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பீர்தே பள்ளி பகுதியை சேர்ந்தவர் விமல்கார்த்திக் (வயது 23).
இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு அழைப்பு விடுத்த மர்ம நபர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி விமல்கார்த்திக்கின் வங்கி கணக்கு விபரங்களை கேட்டுள்ளார்.
வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நம்பி விமல்கார்த்திக் தனது கணக்கு தொடர்பான விபரங்களை தெரி வித்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.5 லட்சத்து 11 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமல்கா ர்த்திக் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் தந்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து பணத்தால் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
Next Story






