என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்த பேnது எடுத்த படம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்- பல்வேறு இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு
- இந்து அமைப்புகளின் சார்பிலும், பொதுமக்கள், பக்தர்கள் சார்பிலும் 160 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
- பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதித்துள்ள இடிங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஓசூர்,
இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சப்-டிவிஷனில் 580 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. ஓசூரில் மட்டும் விசுவ இந்து பரிஷத்,இந்து முன்னணி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் சார்பிலும், பொதுமக்கள், பக்தர்கள் சார்பிலும் 160 சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் விழாவையொட்டி, ஓசூர் எம்.ஜி.ரோடில் உள்ள விநாயகர்கோவில், உழவர் சந்தை பின்புறமுள்ள மவுனகுரு விநாயகர் கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கோவில்கள் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர்கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விநாயகர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல தருமபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் காவல்துறை அனுமதித்துள்ள இடிங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர்.






