என் மலர்
நீங்கள் தேடியது "பெண் தற்கொலை முயற்சி"
- கணவருக்கு தெரியாமல் ஷமீம் அருண் என்பவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி அதில் ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
- பணத்தை அருண் கேட்டு வந்த நிலையில் ஷமீம் கொடுக்காமல் இருந்து வந்ததால் கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
பெரம்பூர்:
சென்னை ஓட்டேரி நியூ பேரான்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் அப்துல் ஹஜிஸ். இவரது மனைவி ஷமீம் (39). வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கணவருக்கு தெரியாமல் ஷமீம் பழைய வாழைமாநகர் பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி அதில் ரூ.20 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார்.
மீதி பணத்தை அருண் கேட்டு வந்த நிலையில் அவர் கொடுக்காமல் இருந்து வந்ததால் கணவரிடம் சொல்லி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்த ஷமீம் நேற்று வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயத்துடன் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
- நிலத்தை இழந்த நான் பலமுறை புகார் அளித்தும் கட்சித் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கா தேவி. இவர் விஜயவாடாவில் உள்ள துணை முதல் மந்திரி பவன் கல்யாண் அலுவலகம் அருகே வந்தார். பின்னர் துணை முதல் மந்திரி அலுவலகம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று வேகமாக மாடிக்கு ஓடினார். அங்கிருந்து குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துர்கா தேவியிடம் உங்களின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிவர்த்தி செய்து தருவதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த துர்கா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் துர்கா தேவி போலீசாரிடம் கூறியதாவது:-
ஸ்ரீகாக்குளத்தில் உள்ள எங்களது நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் நிலத்தை இழந்த நான் பலமுறை புகார் அளித்தும் கட்சித் தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.
- விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சந்திரகலா (வயது 36). இவர்களுக்கு 3 மகள்கள்,ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில் எட்டிபட்டி கூட்டு ரோடு பகுதியை சேர்ந்த விஜய்சங்கர் என்ற வாலிபர் சந்திரகலாவிடம் வந்து அவரது பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு திருமணம் செய்து தரவும் கேட்டுள்ளார்.
ஆனால் சந்திரகலா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஜய்சங்கர் சந்திரகலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சந்திரகலா தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விஜய்சங்கரை கைது செய்தனர்.
இதேபோல ஊத்தங்கரை அருகேயுள்ள ஊனாம்பாளையம் பகுதியை சேர்ந்த துரை,ராஜேந்திரன் ஆகிய 2 பேரும் நிலத்தகராறு காரணமாக தங்களது உறவுக்கார பெண்ணான சாந்தி என்பவருக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மனமுடைந்த அவர் பூச்சிமருந்தை குடித்து விட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சாந்தியின் கணவர் கிருஷ்ணன் தந்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து துரை, ஜெயராமன் 2 பேரையும் கைது செய்தனர்.






