என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, கட்சி தலைமையிடம் பரிந்துரைக்க வேண்டும்

    ஓசூர்,

    ஓசூரில் மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம், ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினர், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், திம்மராஜ்,ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் ரவிகுமார் வரவேற்றார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ. வுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மேலும், மாநகர செயலாளரும் ,மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன் உள்பட பலர் பேசினார்கள். மேயர் சத்யா பேசுகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, கட்சி தலைமையிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். 

    • செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்குமுறைத் திருத்தம் -2023 பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்(பொறுப்பு) ராஜேஸ்வரி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார் பெற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி உட்பட 6 தொகுதிகளில் 8 லட்சத்து 6 ஆயிரத்து 837 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 99 ஆயிரத்து 28 பெண் வாக்காளர்களும், 291 இதரர் உட்பட 16 லட்சத்து 6 ஆயிரத்து 156 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பின்னர், தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், இறந்த, வெளியூர் சென்ற நபர்கள் நீக்கம் செய்ததின் அடிப்படையில் புதியதாக 12 ஆயிரத்து 19 வாக்காளர்கள் நாளது வரை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தற்போது நடைபெற உள்ள சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்படி வருகிற ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் அனைத்து இளம் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்திட தகுதியுடைய வராகின்றனர்.

    இதற்காக, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் வளாக தூதர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு, இளம் வாக்காளர்கள் அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதே போல், தேர்தல் ஆணையத்தின் புதிய விதிகளின்படி, வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் 18 வயதினை பூர்த்தி செய்பவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்கள்து விண்ணப்பங்கள் தற்காலிக மாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, உரிய தகுதியேற்படுத்தும் நாட்களில், பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

    இதே போல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்காத வாக்காளர்களும் இணைத்துக் கொள்ளலாம். சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் -2023-ன்படி வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணி நேற்று (9ம் தேதி) முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையிலும், வருகிற 12, 13, 26 மற்றும் 27ம் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று அன்றே பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், வட்டாட்சியர்கள் (தேர்தல்) ஜெய்சங்கர், சம்பத், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) சரவணன், கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் கோவிந்தசாமி, தங்கராஜ், அதிமுக நகர செயலாளர் கேசவன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லலித்ஆண்டனி, பா.ஜ மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அன்பரசன், மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது.
    • தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி கிராமத்தை சோந்தவர் மாதேஷ் (வயது27). கூலி தொழிலாளி. இவருக்கும் ஞானமலர் (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு பிரகாஷ் என்ற இரண்டரை வயது மகனும், ஆதிரா என்கிற 9 மாத பெண் குழந்தையும் இருந்தனர்.

    இந்நிலையில் ஞானமலருக்கும், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ்(28) என்வருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்றதும், தனது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் ஞானமலர் உல்லாச மாக இருந்து வந்தார்.

    இது குறித்து மாதேசிற்கு தெரியவந்தது. தனது மனைவியின் நடத்தை குறித்து அறிந்த மாதேஷ், கடந்த 3-ம் தேதி மனைவி ஞானமலரை கண்டித்தார். மேலும், இனி கள்ளக்காதலை தொடரகூடாது என்று தனது மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமலர் இது குறித்து தனது கள்ளக்காதலன் தங்கராஜிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

    தனக்கு குழந்தைகள் இருப்பதால் கள்ளக்காதலை தொடர முடியாது. எனவே, அவர்களை கொன்றுவிடலாம் என ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் போட்டு கொடுத்த திட்டத்தின்படி, ஞானமலர், தனது குழந்தைகளான பிரபாஷ், ஆதிரா ஆகிய 2 பேருக்கும் எலிபேஸ்டை கொடுத்துள்ளார்.

    இதில் 2 குழந்தைகளும் வாந்தி எடுத்து, மயக்கம் போட்டு விழுந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து தானும் குடித்துவிட்டதாக ஞானமலர் கூறியுள்ளார். இதையடுத்து 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ஆதிரா கடந்த 5-ம் தேதி காலை இறந்தார்.

    இது குறித்து குழந்தையின் தந்தை மாதேஷ், ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் ஞானமலர், அவரது கள்ளக்காதலன் தங்கராஜ் உடன் இணைந்து குழந்தைகள் 2 பேருக்கும் விஷம் கொடுத்ததும், அதில் குழந்தை ஆதிரா இறந்ததும், மற்றொரு மகன் பிரபாஷ் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. மேலும், தானும் விஷம் குடித்ததாக ஞானமலர் நாடகமாடியதும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கொன்ற தாய் ஞானமலர், தாயின் கள்ளக்காதலன் தங்கராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ஞானமலரை சேலம் பெண்கள் சிறையிலும், தங்கராஜை சேலம் மத்திய சிறையிலும் அடைத்தனர்.

    • கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.
    • விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எம்.எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 27).கூலி தொழிலாளி.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை அதே பகுதியில் உள்ள கோவில் முன்பு நிறுத்தியிருந்தார்.அப்போது ஒரு ஆசாமி அந்த மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.

    இதையடுத்து அவரை கையும்,களவுமாக மடக்கி ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி சங்கர் (41) என்பது தெரிய வந்தது.அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 520 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான தேக்வாண்டோ போட்டி நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான தேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில், 14, 17 மற்றும் 19 வயது ஆகிய மூன்று பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச்சேர்ந்த 520 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தேக்வாண்டோ போட்டி யில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியிலும், நீச்சலில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகள் காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும் கலந்து கொள்ள உள்ளனர். தேக்வாண்டோ போட்டியை தேசிய தேக்வாண்டோ நடுவர் சுதாகர், தேசிய விளையாட்டு நிறுவன பயிற்சியாளர் வீரமணி, தேசிய நடுவர் சிவகுமார் மற்றும் குழுவினர் நடத்தினார்கள். 

    • கல்வி உதவித்தொகை பெறுவ தற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையினர் நல அலுவலரை (அறை எண்.11-ல்) அணுகலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவ தற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1&ம் வகுப்பு முதல் 10&ம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயன் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளிடமிருந்து 2022-23ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலக்கெடு விற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை (அறை எண்.11-ல்) அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள கிருஷ்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 38).இவர் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார்.திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 19 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது.

    திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் ராஜா புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர்.

    • ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பூர்வாங்க ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரும் கூட்டுறவு வார விழா தலைவருமான ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறும் போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கூட்டுறவு அமைப்புகளின் வளர்ச்சியும் அவற்றின் எதிர்காலமும் என்ற முதன்மை மையக் கருப்பொருளை மையமாகக் கொண்டு வருகிற 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் நாட்களும் கூட்டுறவுக் கொடியை ஏற்றி கூட்டுறவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் விழா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
    • துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தொடங்கப்பட்ட ஊர்வலத்திற்கு கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் தலைமைதாங்கினார். கல்லூரி முதல்வர் ஆறுமுகம் வரவேற்றார். கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி னார்கள்.

    இந்த ஊர்வலம் புதிய பஸ் நிலையம், அண்ணா சிலை, டி.பி. ரோடு, காந்தி சிலை, பழையபேட்டை என முக்கிய சாலைகள் வழியாக சென்றன. இதில் சப்&இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, குப்புசாமி, ராமதாஸ், போக்குவரத்து சப்&இன்ஸ்பெக்டர் சீதாராமன், கல்லூரி நிர்வாக அலுவலர் சுரேஷ், மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

    • சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
    • மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே ஜூஜூவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.

    இந்த கண்காட்சியை, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

    கண்காட்சியில், 150 நாடுகளின் மற்றும் இந்திய அரசர்கள் காலத்து ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவர் எம்.அசோகா, கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்தி பேசினார்கள்.

    ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வரலாறு குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு,மாணவ மாணவியர் விளக்கி கூறினர். மேலும், மண்டல தலைவர் ரவி, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பேகேபள்ளி ஊராட்சி தலைவர் சைத்ரா அருண், மாநகராட்சி கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், ஆனந்த ரெட்டி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் உள்பட பலர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

    • புளியமரத்தில் எதிர்பாரா தவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.
    • தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் பசுபதி (வயது28). கார்பெண்டரான இவருக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகியுள்ளது.

    இந்த நிலையில் இவர் நேற்று மாலை சந்தூர் அடுத்துள்ள மகாதேவகொல்லஅள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோர புளியமரத்தில் எதிர்பாரா தவிதமாக இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தை அந்த வழியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×