என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரும் பாராளுமன்ற தேர்தலில்   கிருஷ்ணகிரி தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும்-   மேயர் கோரிக்கை
    X

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசிய போது எடுத்த படம். அருகில் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும்- மேயர் கோரிக்கை

    • ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
    • வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, கட்சி தலைமையிடம் பரிந்துரைக்க வேண்டும்

    ஓசூர்,

    ஓசூரில் மாநகர தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம், ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினர், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், திம்மராஜ்,ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர துணை செயலாளர் ரவிகுமார் வரவேற்றார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ. வுமான ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    மேலும், மாநகர செயலாளரும் ,மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. பி.முருகன் உள்பட பலர் பேசினார்கள். மேயர் சத்யா பேசுகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க, மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி, கட்சி தலைமையிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×