என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுபான்மையின மாணவ, மாணவிகள்   மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு
    X

    சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால நீட்டிப்பு

    • கல்வி உதவித்தொகை பெறுவ தற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
    • சிறுபான்மையினர் நல அலுவலரை (அறை எண்.11-ல்) அணுகலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவ தற்கு காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1&ம் வகுப்பு முதல் 10&ம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயன் மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளிடமிருந்து 2022-23ம் ஆண்டிற்கு மத்திய அரசின் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வருகிற 15-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலக்கெடு விற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை (அறை எண்.11-ல்) அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×