என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி வரவேற்றார்.

    பள்ளிகளில் தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செடிகளை நட்டு வைப்பது குறித்த விழிப்புணர்வை கார்ட்டூன் மூலம் விளக்கும் காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    இதில் 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும், அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    ஓசூர் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஓசூர் வந்தார்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று ஓசூர் வந்தார். அவர் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி மற்றும் தேவகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    அவருடன் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டகலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    பூனப்பள்ளி ஊராட்சி யில் சின்னப்பா ரெட்டி என்பவர் தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பில் மானியத்தொகை ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஜெர்பெரா பூ செடி உற்பத்தி செய்யப்பட்டுள்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியில் தக்காளி, கேரட் நடவு பணிகளையும், பசுமை குடிலில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். பின்னர் தளியில் இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவில் மகளிர்க்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை தூதரக பொது அலுவலர் யார் யசேல், இஸ்ரேல் நாட்டிற்கான தென்இந்திய தூதர் டேம்மி பென் ஹெய்ம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    மேலும், தோட்டக்க லைத்துறை மூலம் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், கைவினை பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான மலர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
    • நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் விளக்கினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் நம் நலம் நம் கையில் என்ற விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு ஆலோசகர் ஜெயா தலைமை வகித்தார். லேப் டெக்னீசியன் முருகன் முன்னிலை வகித்தார்.

    நோய்கள் பரவும் விதம் குறித்தும் அதை தடுப்பது எவ்வாறு எனவும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அன்பரசு விளக்கினார். நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு லேப் டெக்னீசியன் நீலாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊத்தங்கரை அருகே நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரிக்கரையில் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கலி கண்ணன் கிடந்தார்.
    • கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.

    மத்தூர், நவ.24-

    திருப்பத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் கலிகண்ணன் (வயது 52).

    திருப்பத்தூர் நகர பா.ஜ.க செயலாளரான இவர் தண்ணீர் கேன் சப்ளை மற்றும் ரியல் எஸ்டேட் பைனான்ஸ் போன்ற தொழில்களை செய்து வந்தார். இவர் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள வெப்பாலம் பட்டி வேலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஏரிக்கரையில் விவசாய நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.அவரது கழுத்தில் பலத்த வெட்டு காயம் இருந்தது.

    இதனைக் கண்ட பொதுமக்கள் ஊத்தங்கரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி. அமலா அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கலிகண்ணன் அரைக்கால் டவுசர் மற்றும் சிவப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவரது கழுத்தில் மட்டும் வெட்டுக்காயம் இருந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊத்தங்கரை மற்றும் திருப்பத்தூர் டவுன் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    மேலும் தகவல் அறிந்த கலிகண்ணனின் குடும்பத்தினர் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பா.ஜ.க கட்சியினரும் ஆஸ்பத்திரியில் திரண்டனர்.இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.

    கலி கண்ணன் பிணமாக கிடந்த இடத்தில் அதிக ரத்த கறை இல்லை. அவரை வேறு எங்காவது வைத்து கொலை செய்துவிட்டு உடலைக் கொண்டு வந்து வீசி இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

    திருப்பத்தூர் நகரப்பகுதி ஊத்தங்கரைக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் உடல் ஊத்தங்கரையை கடந்து 8 கிலோமீட்டர் தொலைவில் வீசப்பட்டுள்ளது. இதனால் கொலை ஊத்தங்கரை பகுதியில் நடந்திருக்கலாம் என்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.

    திருப்பத்தூரில் கலிகண்ணன் வீடு அமைந்துள்ள அண்ணா நகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் பஸ் நிலையம் மற்றும் முக்கிய இடங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலை தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    நேற்று இரவு திருப்பத்தூர் செட்டி தெரு பகுதியில் கலிகண்ணன் நின்று கொண்டிருந்தார்.அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை அழைத்துச் சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

    இதன் மூலம் அவரை கடத்திச் சென்று கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் டவுன் மற்றும் ஊத்தங்கரை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கலிகண்ணன் கடந்த 6 ஆண்டுகளாக பா.ஜ.க.வில் நகர செயலாளராக இருந்துள்ளார். இவர் பொது கூட்டங்களில் பேசியதை தொடர்ந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது தொடர்பாக பா.ஜ.க.வினர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலி கண்ணனுக்கு போனில் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

    இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது தொழில் சம்பந்தமாக அவருக்கு முன் விரோதம் இருந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.

    மத்தூர்,

    கர்நாடக மாநிலம், பெங்களூரு சி.வி. ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பிரதாப் (வயது28). இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கவுண்டனூர் பகுதியில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பிரதாப் உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார்.
    • அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எலவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் சம்பவத்தன்று மாணவி திடீரென மாயமானார். இதனால் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
    • மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள இடைபையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது16). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    ஓசூர்,

    ஒசூர் மாநகரா ட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆவலப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம், பாலாஜி நகர், பிருந்தாவன் கார்டன் ஆகிய பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கடைகளை நேற்று, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள், வார்டு நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சியும், சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் கண் மருத்துவர்கள் தமிழரசு, கமலி ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட நோயாளிகளுக்கு கிட்டபார்வை, தூரப்பர்வை, கண்ணில் நீர்வடிதல், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் விழி பரிசோதனை செய்தனர்.

    கண் சம்பந்தமான பிரச்சனை உள்ள நோயாளிகளை தேர்வு செய்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவச கண் அறுவை சிகிச்சை செய்து கண் கண்ணாடி, இலவச உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் ஆகியவை வழங்கி மீண்டும் அரசு செலவில் வீட்டிற்கு அழைத்து வருதல் உள்ளிட்ட ஆலோசனை நோயாளிகளுக்கு வழங்கினர்.

    முகாமில் ஊராட்சி மன்றத்துணை தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சரவணன் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.

    • முனிராஜ் மற்றும் அவரது தந்தை தூர்வாசன் உள்பட மேலும் சிலர் தாக்கியதில், சந்திரன் கீழே சரிந்து விழுந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து முனிராஜை கைது செய்தனர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த தொட்டிநாய்கன ஹள்ளியை சேர்ந்தவர் சந்திரன் (வயது41). கூலித்தொழிலாளி. இவரது 17 வயது மகனின் நண்பருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி முனிராஜ் (44), என்பவரது 14 வயது மகன் மொபைல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    தன் நண்பனுக்கு எவ்வாறு தவறான குறுஞ்செய்தி அனுப்பலாம் என கூறி சந்திரனின் மகன் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு கடந்த, 22-ந்தேதி இரவு முனிராஜ் வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்டார்.

    அப்போது, தனது மகன் அப்படித்தான் குருஞ்செய்தி அனுப்புவான் என, முனிராஜ், அவரது தந்தை தூர்வாசன் ஆகியோர் கூறியுள்ளனர்.

    மேலும் சந்திரன் மகன் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து வைத்து கொண்டு வீட்டிலிருந்து பெற்றோரை வருமாறு முனிராஜ் கூறியுள்ளார்.

    இதனால் சந்திரன், தாய் நல்லம்மாள், மாமா கோவிந்தன் ஆகியோர் புதுப்பட்டி கிராமம் சென்றனர். அங்கு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதில், முனிராஜ் மற்றும் அவரது தந்தை தூர்வாசன் உள்பட மேலும் சிலர் தாக்கியதில், சந்திரன் கீழே சரிந்து விழுந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்ைசக்காக ராயக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முனிராைஜ கைது செய்தனர். மேலும் தூர்வாசன் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.

    • தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.
    • இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிக அளவில் பப்பாளி விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வருடம் நீர் வளம் நன்றாக இருப்பதால் கடந்த 6 மாதங்களாக இப்பகுதியில் விவசாயிகள் பப்பாளி விளைச்சலில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது ஒரு கிலோ பப்பாளி 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருவதால் பப்பாளி நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தீர்த்தம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது பப்பாளி தோட்டத்தில் பப்பாளி பழங்கள் கொத்து, கொத்தாக காய்த்து மரத்தில் தொங்குகின்றன.

    இந்த காட்சி அவ்வழியாக செல்லும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    தற்போது பப்பாளி பழங்களை பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டது.
    • ஆழ்துளை கிணற்றில் தற்போது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியே வருகிறது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இருந்து அலேலிங்கபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தில் குடிநீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.

    ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாமல் வற்றிய நிலையில் ஆழ்துளை கிணறு கைவிடப்பட்டது.

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் அந்த ஆழ்துளை கிணறு திறந்த படியே உள்ளது. மேலும் ஆபத்தை உணராமல் இப்பகுதி குழந்தைகளும் அதன் அருகே விளையாடி வருகின்றனர்.

    தற்போது வேப்ப னப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மூடப்படாத இந்த ஆழ்துளை கிணற்றில் தற்போது தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியே வருகிறது.

    ஆழ்துளை கிணற்றை மூடாமல் இருப்பதால் தற்போது கிராம மக்கள் அதில் வரும் தண்ணீரை அப்படியே துணிகளை துவைக்கவும்,ஆடு, மாடுகளை குளிப்பாட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஆழ்துளை கிணற்றில் இருந்து 24 மணி நேரமும் தண்ணீர் சாலையில் வெளியேறி வருவதால் சாலை அரிப்பு ஏற்பட்டு சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

    உடனடியாக திறந்த வெளியில் இருக்கும் இந்த ஆழ்துளை கிணற்றை மூடி உரிய வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ×