என் மலர்
கிருஷ்ணகிரி
- நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- 17-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது:-
15, 20 ஆண்டுகளுக்கு முன்பு சில வருடங்களாக பருவமழை பெய்யாததால் எங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தோம். அதனால் வறுமையில் நிலங்களை விற்று, விற்ற பணத்தில் தற்போது வாங்கியுள்ள நிலங்களை பண்படுத்தி ஆழ்துளை கிணறு பாசனம் செய்து பல்வேறு விவசாயம் செய்து வரும் வேலையில் விளை நிலங்களில் சிப்காட் வருவதை எதிர்க்கிறோம் என்று கூறினர்.
சில கட்சி அமைப்புகள் மற்றும் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வரும் நிலையில் இன்று கருப்பு கொடி பறக்க விட்டு 17-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- சாலையில் திடீரென திரும்ப முயன்ற போது இரு லாரிகளும் மோதிக்கொண்டன.
- ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து கொத்த மல்லி மூட்டை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சூளகிரி அருகே சின்ன தியாகரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் லாரி வந்த போது மற்றொரு லாரி சாலையில் திடீரென திரும்ப முயன்ற போது இரு லாரிகளும் மோதிக்கொண்டன.லாரியில் இருந்த கொத்த மல்லி மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவலர்கள் ஒரு மணி நேரம் போராடி படுகாயம் அடைந்த வெங்கடேசை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் வாகன நெரிசல் எற்பட்டது.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னார் வளைவு பகுதியில் விபத்து அதிகமாக ஏற்படுவதால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- மாநில எஸ்.டி.அணி செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார்.
- தலைமையின் அனுமதியுடன்,அடுத்த மாதம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
ஓசூர்,
பா.ஜனதா கட்சியின் எஸ்.டி அணி மாநில செயற்குழு கூட்டம், ஓசூரில் நடைபெற்றது.
ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மாநில எஸ்.டி.அணி செயலாளர் பாப்பண்ணா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளரும், எஸ்.டி. அணியின் பொறுப்பாளருமான சதீஷ் குமார், மாநில எஸ்.டி.அணி தலைவர் சிவப்பிரகாசம், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பிக்குநாத் நாயக் உள்பட பலர் பேசினர்.
பின்னர், சதீஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பெரும்பாலான மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. பழங்குடி மக்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் 10 சதவீதமும், மத்திய அரசில் ஏழரை சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.
குறைந்த பட்சம், மத்திய அரசு வழங்குவதைப்போன்று ஏழரை சதவீதம் இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து பழங்குடி மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி, பழங்குடி மக்களை ஒன்று திரட்டி, கட்சியின் மாநில தலைமையின் அனுமதியுடன்,அடுத்த மாதம் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- செந்தாமரை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.
- வேக தடுப்பு ஒன்றில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகொட்டை அருகேயுள்ள உள்ளட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 35). இவரது மனைவி செந்தாமரை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு செல்கிறார்.
நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்தில் முனிராஜ் விட்டுள்ளார்.
பின்னர் வீட்டுக்கு திரும்புகையில் அந்த நிறுவன வளாகத்திலேயே உள்ள வேக தடுப்பு ஒன்றில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனிராஜை மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை முனிராஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ராயகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஊரைக் காலி செய்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
- பெரியமலை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
போச்சம்பள்ளி அருகே கிராமம் செழிக்கவும், நோய்கள் இன்றி நலமுடன் இருக்கவும், பொதுமக்கள் ஊரைக் காலி செய்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சென்றாயம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், மண்பாண்ட தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், சிலர் வெளி மாநில, மாவட்டங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்து வரும் சனிக்கிழமையில் ஊரைக் காலி செய்து, பெரியமலை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்றாம்பட்டி கிராம மக்கள் நேற்று காலை ஊரைக் காலி செய்து, பெரியமலை கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
அங்கு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு, ஆஞ்சநேயர், பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர், அங்கேயே சமைத்து, அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பிறகு ஊருக்கு திரும்பிய கிராம மக்கள், இரவு முனியப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, முன்னோர்கள் காலத்தில் இருந்து கிராமம் செழிக்கவும், நோய்கள் இன்றி வாழ்ந்திடவும், தொழில் சிறக்கவும், ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கு பின் வரும் சனிக்கிழமையில், இவ்வாறு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிகழ்வினை தொடர்ந்து நாங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வோம் என்றனர்.
- எம்.ஜி.ஆரின் 106வது பிறந்த நாள் விழாபொதுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அதில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 106&வது பிறந்த நாள் விழாபொதுக்கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி 5ரோடு ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின்106-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்
அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயலாளர் விமல் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நகர செயலாளர் கேசவன் வரவேற்புரையாற்றினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்திற்கும் இன்றைய தி.மு.க., அரசு மூடு விழா நடத்திவிட்டது. திராவிட மாடல் ஆட்சி என்று பேசும் தி.மு.க.,வினருக்கே அதுபற்றி தெரியவில்லை. தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை தலைவிரித்தாடுகிறது. சட்டம் ஒழுங்கி சீர்கெட்டுள்ளது. பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அதில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.
ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி பெற்றே தீருவோம். பன்னீர்செல்வம் துரோகி. கட்சியை அழிக்கப் பார்க்கிறார். 63எம்.எல்.ஏ.,க்கள், 2,100 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். சசிகலா ஆட்சியைப் பிடிப்பேன் என்றார். ஜெயலலிதாவின் சமாதியில் சத்தியம்செய்தார். ஆனால் தற்போது வீட்டிலேயே முடங்கிப்போனார். அவரை நம்பி இருந்த தினகரன்
தனியாக கட்சியை நடத்து கிறார். எனவே அ.தி.மு.க,.வை யாராலும் அழிக்க முடியாது. கட்சியி ல்இல்லாதவர்களுக்கும், அங்கு போகாதவர்களுக்கும் பன்னீர்செல்வம் அணியில் பதவி கொடுக்கின்றனர்.பதவி கொடுப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து, மாவட்ட கவுன்சிலர்கள் ஜெயா ஆஜி, சங்கீதா கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் நன்றி கூறினார்.
- பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலை ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக ்களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும்,
குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்றகுறைபாடுகளை நிவர்த்தி செய்ய நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
ஒவ்வொரு தாலுகாவில் ஒரு கிராமத்தில் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் குந்தாரப்பள்ளி அடுத்த சாமந்தமலை கிராமத்தில்
நடந்த பொது விநியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் குடிமை பொருள் வட்டவழங்கல் வட்டாட்சியர் ரமேஷ், வட்ட பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் கண்ணன்,
சத்தீஷ், ஊராட்சி செயலாளர் முருகன், விற்பனையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அந்தப் பகுதியில் மக்களின் ரேஷன் கார்டில் புதியதாக உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம், தொலைபேசி எண், முகவரி மாற்றம் உள்ளிட்ட குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- 2 குழந்தைகளுக்கும் விஷம் ெகாடுத்து விட்டு தானும் குடித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிாி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்.பேக்கரி மாஸ்டர். இவரு டைய மனைவி கவுரி (வயது 24).
இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனாஸ்ரீ (2) என்ற மகளும் இருந்தனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கவுரி செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவர் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் மகளை சமாதானம் செய்தனர். இதனிடையே நேற்று முன்தினம் கவுரி 2 குழந்தைகளுக்கும் விஷம் ெகாடுத்து விட்டு தானும் குடித்தார்.
சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக அவர்கள் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தைகள் ஜீவன், பாவனாஸ்ரீ ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.கவுரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
- பேருந்தில் பயணித்த சுமார் 14-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து வெங்காய லோடு ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தில் பயணித்த சுமார் 14-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லாரி ஓட்டுநர் கை முறிவு அடைந்த நிலையில் அனைவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
மேலும் பலத்த காயம் அடைந்த நான்கு பேர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- தி.மு.க.வில் பேரூர் கழக மாணவரணி பொறுப்பில் உள்ளார்.
- அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டார் என கூறினார்.
காவேரிப்பட்டினம்,
காவேரிப்பட்டினம் தேசிய செட்டி தெரு சேர்ந்தவர் சின்ராஜ். இவர் நகை கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி தி.மு.க.வில் காவேரிப்பட்டினம் 14-வது வார்டு உறுப்பினராக உள்ளார். இவருக்கு மோகனசுந்தரம்( 25) என்ற மகன் உள்ளார். இவர் தி.மு.க.வில் பேரூர் கழக மாணவரணி பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு காவேரிப்பட்டினம் ஆற்றோரம் உள்ள சிவன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வரும்போது ரோட்டில் நிறுத்திருந்த லோடு ஆட்டோவின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதியதால் கீழே விழுந்து தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மோகனசுந்தரத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டார் என கூறினார். எனவே பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது .
இது குறித்து காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
- பிரசித்தி பெற்ற தொட்டில் அம்மன் கோவில் உள்ளது.
- பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்ச ம்பள்ளி அருகேயுள்ள என்.தட்டுக்கல் கிராமத்தில் சுமார் 1500 அடி உயரத்தில் கம்பர் மலை அமைந்து ள்ளது. இங்கே பிரசித்தி பெற்ற தொட்டில் அம்மன் கோவில் உள்ளது.
நேற்று தை அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி அம்மனை தரிசனம் செய்தனர்.
குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடக்க வேண்டியும் வழிபட்டனர். மேலும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் அம்மனுக்கு புதியதாக தொட்டில் வைத்து குழந்தைகளை போட்டு ஆட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- லைட்டு களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடிக்க முயன்றனர்.
- வனத்துறை யினா் அவரை கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பனைக்காப்புக்காட்டில் வனச்சரகர் சீத்தாராமன் தலைமையில் வனக்கா ப்பாளர்கள் பெருமாள் மற்றும் பருவதன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது லைட்டு களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை புதரில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.
மற்றொரு ஆசாமியை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அவர் வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் மகன் சக்தி (வயது 22) என்பதும், வன விலங்குகளை வேட்டை யாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறை யினா் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, பேட்டரி மற்றும் நெற்றி லைட்டுகளை வனத்துறை யினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பியோடிய வண்ணாத்தப்பட்டியை சேர்ந்த மயில்வாகனன் (48) என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.






