என் மலர்
நீங்கள் தேடியது "பெரியமலை கோயிலில் சிறப்பு பூைஜ"
- ஊரைக் காலி செய்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
- பெரியமலை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
போச்சம்பள்ளி அருகே கிராமம் செழிக்கவும், நோய்கள் இன்றி நலமுடன் இருக்கவும், பொதுமக்கள் ஊரைக் காலி செய்து, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சென்றாயம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயம், மண்பாண்ட தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில், சிலர் வெளி மாநில, மாவட்டங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். இக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்து வரும் சனிக்கிழமையில் ஊரைக் காலி செய்து, பெரியமலை கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்றாம்பட்டி கிராம மக்கள் நேற்று காலை ஊரைக் காலி செய்து, பெரியமலை கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.
அங்கு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு, ஆஞ்சநேயர், பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
பின்னர், அங்கேயே சமைத்து, அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பிறகு ஊருக்கு திரும்பிய கிராம மக்கள், இரவு முனியப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, முன்னோர்கள் காலத்தில் இருந்து கிராமம் செழிக்கவும், நோய்கள் இன்றி வாழ்ந்திடவும், தொழில் சிறக்கவும், ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கு பின் வரும் சனிக்கிழமையில், இவ்வாறு வழிபாடு செய்வது வழக்கம்.
இந்நிகழ்வினை தொடர்ந்து நாங்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்வோம் என்றனர்.






