என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிப்காட்டை எதிர்த்து போராட்டம்
- நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- 17-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம்சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதிகளில் உள்ள விவசாய விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது:-
15, 20 ஆண்டுகளுக்கு முன்பு சில வருடங்களாக பருவமழை பெய்யாததால் எங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வந்தோம். அதனால் வறுமையில் நிலங்களை விற்று, விற்ற பணத்தில் தற்போது வாங்கியுள்ள நிலங்களை பண்படுத்தி ஆழ்துளை கிணறு பாசனம் செய்து பல்வேறு விவசாயம் செய்து வரும் வேலையில் விளை நிலங்களில் சிப்காட் வருவதை எதிர்க்கிறோம் என்று கூறினர்.
சில கட்சி அமைப்புகள் மற்றும் விவசாயிகள் ஆர்பாட்டங்கள் செய்து வரும் நிலையில் இன்று கருப்பு கொடி பறக்க விட்டு 17-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர்.ஐ. அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.






