என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் உண்டியல் தப்பியது.
    • கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது.

    நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வெளிப்பக்க பூட்டுகள் உடைத்து கதவுகள் திறந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள ஒன்றரை அடி உயரம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கோவிலை பார்வையிட்டனர்.

    கோவிலில் முன்பக்கம் இரும்பு கிரில், மூலஸ்தானத்தின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதேபோல மூலஸ்தானத்திலும் இரும்பு கதவு, மரக்கதவு உடைக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் ஆன வாசுதேவ கண்ணன், ராதா, ருக்மணி, ராமானுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சிலைகள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

    உடைக்கப்பட்ட பூட்டுகள் அனைத்தையும் கோவிலின் அருகே வீசி உள்ளனர். கோவில் உண்டியல் பணம் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்ததால் மர்ம நபர்களால் உடைக்க முடியாததால் கோவில் உண்டியல் பணம் தப்பியது.

    மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். எனவே இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கலை நிகழ்ச்சிகள் சரியில்லை என்று கூறி தகராறு செய்துள்ளனர்.
    • வழக்கு பதிவு செய்து ஆனந்தன், சிவன் 2 பேரையும் கைது செய்தனர்.
    • இலை உதிர்காலம் என்பதால் மரங்களில் இலை உதிர்ந்து பட்டமரம் போல் காணப்பட்டு வருகிறது.
    • பச்சைகிளிகளால் அந்த பட்ட மரம் துளிர்த்த இலைபோல காட்சியளித்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சென்னப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தது மேடுபள்ளி கிராமம்.

    இந்த கிராமத்தில் முகப்பில் உள்ள கோவில் அருகே வேப்பமரம் ஒன்று உள்ளது. தற்போது சூளகிரி சுற்றுவட்டாரத்தில் அதிக வெப்பம் நிலவுவதாலும், இலை உதிர்காலம் என்பதால் மரங்களில் இலை உதிர்ந்து பட்டமரம் போல் காணப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வேப்பமரத்தின் மீது இந்த கிராமத்தில் சுற்றி திரியும் ஏராளமான பச்சை கிளிகள் இலை உதிர்ந்த மரத்தின் கிளைகளில் அமர்ந்ததால் பச்சைகிளிகளால் அந்த பட்ட மரம் துளிர்த்த இலைபோல காட்சியளித்து வருகிறது.

    • 10-ம் ஆண்டு சிறப்பு வித்யா ஜெப யாக பூஜை நடத்தப்பட்டது.
    • மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத பேனா, மற்றும் லட்சுமி ஹயக்ரீவர் படம் வழங்கப்பட்டது.
    • அம்மன் கோவிலில் மயான கொள்ளைத் திருவிழா நடந்தது.
    • அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைப் பழங்களைக் குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளைத் திருவிழா நடந்தது.

    கிருஷ்ணகிரி பழையபே ட்டை அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளைத் திருவிழா நேற்று நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் எலுமிச்சைப் பழங்களைக் குத்திக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கிக் கொண்டனர்.

    மதியம், அலங்கரிக்க ப்பட்ட தேரில் பூத வாகனத்தில் அமர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மயான கொள்ளை க்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு இடுகாட்டில் வைக்கப்பட்டிருந்த எலும்புகளை காளி வேடம் அணிந்து சென்ற பக்தர்கள் வாயால் கடித்தனர்.

    விழாவில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இவ்விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவில், பல இடங்களில் பொதுமக்கள் அன்னதானம், நீர்மோர், தண்ணீர் போன்றவற்றை பக்தர்களுக்கு வழங்கினர்.

    • நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • 47-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சூளகிரி,

    சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி மற்றும் அயர்னப்பள்ளி ஊராட்சி, நாகமங்களம் ஊராட்சி பகுதி விளை நில பகுதிகளில் 6-வது சிப்காட் நில எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்காக பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விவசாய உபகரணங்களுடன் வீடுகளில் கருப்பு கொடி பறக்க விட்டு 47-வது நாளாக உத்தனப்பள்ளி ஆர். ஐ. அலுவலகம் அருகே காத்திப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தங்கள் கண்களை கருப்பு துணியை கட்டி கொண்டு ஆர்பாட்டம் செய்துவருகின்றனர்.

    • குழந்தைகளின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கேடயமும் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    ஊத்தங்கரை ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவிலில் சிவராத்திரி விழா நடைபெற்றது. அலங்கார ஆராதனைகளுக்கு பின்னர் பிரசாதங்கள் விநியோகிக்கபட்டது.

    அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் ஸ்ரீதேவி, பூமி நீளாதேவி சமேத கோவிந்த வரதராஜ பெருமாள், மகாலட்சுமி தாயார் ,ஆஞ்சநேய சாமி திருவீதி உலா வந்தனர்.

    சிவராத்திரியை ஒட்டி வேதபாராயணங்கள், முதல் காலத்தில்பால் அபிஷேகமும், சந்திரமௌலீஸ்வரர் அலங்கார காட்சியும், ஊத்தங்கரை குரு நாட்டியாலயா குழந்தைகளின் கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    ரோஷினி சிவாவுக்கு நாட்டிய கலைமணி விருதும் ,கேடயமும், சான்றிதழும், பரிசும், அதனை தொடர்ந்து நட்டு வாங்க கலைமணி ஆசிரியை வீரலட்சுமிக்கு நாட்டியதாரகை விருதும், கேடயமும், சான்றிதழும், பரிசும், தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கேடயமும் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

    யோகா ஆசிரியை வித்யாவிற்கு யோக கலைமணி சுடர் விருதும் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு இரண்டாம் காலம் 151 இளநீர் அபிஷேகம், மூன்றாம் காலத்தில் வாசனை திரவியங்கள் மற்றும் விபூதி அபிஷேகம், நான்காம் காலத்தில் பால் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட ரகத்தில் பார்வதி தாயார் உடனுறை சந்திரமவுலீஸ்வரர் திருவீதி உலா வந்தார்.

    • ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.
    • கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், மாதப்பன், மாரப்பன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இதில் நிர்வாகிகள் ஹரி, தினேஷ், சரவணன், பொன்நாகேஷ், பெருமாள், கோவிந்தராஜ், வெங்கடேசன், ஜகதாம்பிகா, நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முடிவில் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

    இந்த மாநாட்டில், பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதிய மாற்றம், 21 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்கிட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • சென்ராய சுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
    • தேர் இழுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சென்ராய சுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.

    இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகா சிவராத்திரி இரவு மற்றும் பகல் நேரங்களிலும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த கொரோனா காலத்தில் நோய் தொற்று காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்து மீண்டும் நடைபெற்ற காலங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் திரண்டனர்.

    திருவிழாவிற்கு அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினார்கள்.

    திருவிழாவில் இந்து அறநிலையத்துறை சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது.

    • இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
    • 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் உள்ள பெரியமாரியம்மன் கோயில் நேற்று 108 திருவிளக்கு மற்றும் சுமங்கலி பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணகிரி விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், மாத்ருசக்தி, துர்வாகினி அமைப்புகள் சார்பில், சென்னை சாலை உள்ள பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜைகள் நடந்தது. இந்நிகழ்ச்சியினை மாநில அமைப்பு செயலாளர் ராமன், திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாத்ருசக்தி மாவட்ட அமைப்பாளர் அமுதாகோபி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலு, துணைத் தலைவர் கந்தன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர்

    சோமசேகர், ஆசைகுமார், துர்காவாகினி மாவட்ட அமைப்பாளர் தமிழரசி, வி.எச்.பி. சத்தியநாராயணன், பூசாரி பாபு மற்றும் பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன் குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.
    • இது குறித்து வழக்கும் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளி பஞ்சாயத்தி ற்க்குட்பட்ட மெட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன், தங்கள் குடும்ப பிரச்னையில் சம்பந்த மில்லாமல் தலை யிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ரகு என்ற ராணுவ வீரர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன் குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் ராணுவ வீரரான எனக்கு, நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    நாங்கள் அனைவரும், எங்கள் பூர்வீக நிலத்தை பாகம் பிரித்து விவசாயம் செய்து வருகிறோம்.

    இதில், என் சகோதரர் நகுலன் என்பவருக்கும், எங்களுக்கும் விவசாய நிலத்திற்கு செல்லும் பைப்லைன் தொடர்பாக பிரச்னை இருந்தது.

    இந்நிலையில், எங்கள் குடும்பத்திற்கு சம்பந்த மில்லாத கொண்டேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரகு என்பவர் நகுலன், அவரது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கொண்டு, எங்கள் அனைவரையும் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தார். கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி என் சகோதரர் நகுலன் வீட்டிற்கு வந்த ரகு, நகுலன் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கொண்டு இரும்பு ராடுகளால் எங்களை தாக்கினார்.

    இதில், படுகாயமடைந்த நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இது குறித்து வழக்கும் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வேலம்பட்டி ராணுவ வீரர் பிரபு கொலை விவகாரத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரகு, அங்கும் எங்கள் குடும்பத்தை அவமரியாதையாக பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.

    மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சல் அடைந்து ள்ளோம்.

    ராணுவ வீரர் போர்வையில் கொலை மிரட்டல் விடுக்கும் ரகுவிடம் இருந்து எங்கள் குடும்பத்தினரை காப்பாற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • 3 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
    • நண்பர்கள் 2 பேரும் மஞ்சுநாதனை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங்கு நகர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த தீதையாளன் என்பவரது மகன் மஞ்சுநாதன் (வயது 29) என்பதும், தனது தாயாருடன் வசித்து வந்த அவர், பிரபல வணிக நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார், மஞ்சுநாத்தின் நண்பர்களான அதேபகுதியை சேர்ந்த பிரபு (23), மார்க்ஸ் (31) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மஞ்சுநாதன் ரூ.3 ஆயிரம் நண்பர்களுக்கு கொடுக்க வேண்டி இருந்ததும், சம்பவத்தன்று அவர்கள் 3 பேரும் ஒன்றாக மது அருந்தியபோது, இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் 2 பேரும் மஞ்சுநாதனை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பிரபு, மார்க்ஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×