என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப பிரச்சனையில் தலையிட்டு அவதூறு பரப்புகிறார்- ராணுவ வீரர் மீது புகார்
    X

    குடும்ப பிரச்சனையில் தலையிட்டு அவதூறு பரப்புகிறார்- ராணுவ வீரர் மீது புகார்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன் குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.
    • இது குறித்து வழக்கும் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளி பஞ்சாயத்தி ற்க்குட்பட்ட மெட்டுப்பாறை கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராஜேந்திரன், தங்கள் குடும்ப பிரச்னையில் சம்பந்த மில்லாமல் தலை யிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக ரகு என்ற ராணுவ வீரர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தன் குடும்பத்தினருடன் வந்து புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் ராணுவ வீரரான எனக்கு, நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

    நாங்கள் அனைவரும், எங்கள் பூர்வீக நிலத்தை பாகம் பிரித்து விவசாயம் செய்து வருகிறோம்.

    இதில், என் சகோதரர் நகுலன் என்பவருக்கும், எங்களுக்கும் விவசாய நிலத்திற்கு செல்லும் பைப்லைன் தொடர்பாக பிரச்னை இருந்தது.

    இந்நிலையில், எங்கள் குடும்பத்திற்கு சம்பந்த மில்லாத கொண்டேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரகு என்பவர் நகுலன், அவரது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கொண்டு, எங்கள் அனைவரையும் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தார். கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி என் சகோதரர் நகுலன் வீட்டிற்கு வந்த ரகு, நகுலன் மனைவி ஷாலினியுடன் சேர்ந்து கொண்டு இரும்பு ராடுகளால் எங்களை தாக்கினார்.

    இதில், படுகாயமடைந்த நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இது குறித்து வழக்கும் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வேலம்பட்டி ராணுவ வீரர் பிரபு கொலை விவகாரத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரகு, அங்கும் எங்கள் குடும்பத்தை அவமரியாதையாக பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.

    மேலும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சல் அடைந்து ள்ளோம்.

    ராணுவ வீரர் போர்வையில் கொலை மிரட்டல் விடுக்கும் ரகுவிடம் இருந்து எங்கள் குடும்பத்தினரை காப்பாற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×