என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ- ஜியோ போராட்ட ஆயத்த மாநாடு
- ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.
- கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், மாதப்பன், மாரப்பன் ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதில் நிர்வாகிகள் ஹரி, தினேஷ், சரவணன், பொன்நாகேஷ், பெருமாள், கோவிந்தராஜ், வெங்கடேசன், ஜகதாம்பிகா, நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முடிவில் பெருமாள்சாமி நன்றி கூறினார்.
இந்த மாநாட்டில், பழைய பென்சன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். ஊதிய மாற்றம், 21 மாத நிலுவைத் தொகையை உடன் வழங்கிட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






