என் மலர்
கிருஷ்ணகிரி
- ரூ.23 கோடியே 42 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.
- பத்தலபள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பஸ் நிலையத்திற்கான ராமநாயக்கன் ஏரி பூங்காவை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ராமநாயக்கன் ஏரி பூங்கா, ஐ.டி.பார்க், புதிய பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் சர்வதேச மலர் ஏல மையத்தை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக அவர், ஓசூரில் ராமநாயக்கன் ஏரி மற்றும் பூங்காக்கள், மாதிரி நகர திட்டத்தின் கீழ், ரூ.23 கோடியே 42 லட்சம் மதிப்பில் மேம்படுத்துதல் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டும்,
பழைய பூங்காவில் உள் நடைபாதை, யோகா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்து, நாள்தோறும் தூய்மை பணிகள் மேற்கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஓசூர் - பாகலூர் சாலையில், எல்காட் நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் ஐ.டி.பார்க் பணிகளையும், பத்தலபள்ளியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பஸ் நிலையத்திற்கான ராமநாயக்கன் ஏரி பூங்கா,ஐ.டி.பார்க் உள்ளிட்ட இடங்களை, மாவட்ட கலெக்டர் நேரில் திடீர் ஆய்வு இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஓசூரில் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச மலர் ஏல மையத்தையும் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின்போது, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மாவட்டத்தில் உள்ள 71 பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்தது.
- கடந்த பிப்ரவரி 28-ந் தேதியுடன் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்து 100 சதவீதம் ஆதார் எண் இணைத்த மாவட்டமாக நிறைவு பெற்றுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 463 வீட்டு மின் இணைப்புகள், வர்த்தக நிறுவனங்களின் மின் இணைப்புகளும், 120 கைத்தறி மின் இணைப்புகளும், 988 விசைத்தறி மின் இணைப்புகளும், 71 ஆயிரத்து 961 விவசாய மின் இணைப்புகளும், 19 ஆயிரத்து 888 குடிசை பகுதி மின் இணைப்புகளும் என மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 420 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 71 பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடந்தது. அதன்படி மின் பணியாளர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று இணைத்துள்ளனர். ஒரு சில இடங்களில் விவசாய மின் இணைப்புகளுக்கான பெட்டி மட்டுமும், அதை எங்கு பயன்படுத்துகின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.
அவர்களையும் கண்டறிந்து ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப்ரவரி 28-ந் தேதியுடன் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்து 100 சதவீதம் ஆதார் எண் இணைத்த மாவட்டமாக நிறைவு பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுகூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் (வடக்கு) குண வசந்தரசு தலைமை வகித்தார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தி.மு.க மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலதிட்டங்களை வழங்கினார்.
முன்னதாக மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டி ஊராட்சி மாதம்பதி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் கட்சி கொடியேற்றி ஏற்றி வைத்தும் தூய்மை பணியாளர்களை கெளவரவித்தும் சீறுடைகள் மற்றும் இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்து கூறி சிறபுரையற்றினார்.
இதனை தொடர்ந்து மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாகம்பட்டி கோட்டானூர், ஒலப்பட்டி, குன்னத்தூர், பெரம கவுண்டனூர், பொம்மேப்பள்ளி ஊராட்சி ஜீடி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க கழக கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலதிட்ட ங்களை வழங்கினார். பொது கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் புதுகோட்டை விஜியா சிறப்புரையாற்றினார்.
இதில் மத்தூர் தி.மு.க தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நரசிம்மன் தலைமையில் செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், துணைத் தலைவர் பர்வின் தாஜ் சலீம், ஒன்றிய துணை செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.சங்கர், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரதநிதிகள் கோவிந்தராஜ், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பிரமணி, சந்தோஷ்குமார், செல்வி கதிர்வேல், பெருமாள், செந்தாமரை சுப்பிரமணி, பரந்தாமன், ஒன்றிய பிரதிநிதி தனசேகரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலாளர் கமலநாதன் நன்றி கூறினார்.
- ராமாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
- பள்ளி மாணவிகளுக்கு பாரத பிரதமரின் செல்வமகள் திட்டத்தில் மாணவிகளின் பெயரில் முன்பதிவு தொகையை செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் அன்பரசன் கலந்து கொண்டு இனிப்பு களை வழங்கினார்.
மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாரத பிரதமரின் செல்வமகள் திட்டத்தில் மாணவிகளின் பெயரில் முன்பதிவு தொகையை செலுத்தினார்.
மேலும் அஞ்சல் சேமிப்பு கணக்கை தொடங்கி அட்டைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு சேமிப்பு திட்டத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது
- சுரேசின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). சவுண்ட் சர்வீஸ் தொழிலாளி. இவருக்கும் துர்கா தேவி (26) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுககு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளாள்.
இந்த நிலையில் துர்கா தேவி, சிவம்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் அருண்குமார் (36) என்பவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சுரேஷ் மனைவியை கண்டித்தார்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சுரேசின் தந்தை முருகன் கொடுத்த புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மத்தூர் போலீசார் சுரேசின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி துர்கா தேவி, அருண்குமார் ஆகியோரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்தனர்.
கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் துர்காதேவியையும், சேலம் மத்திய சிறையில் அருண்குமாரையும் அடைத்தனர்.
- விநாயகர் சதுர்த்தி அன்று பிரச்சினை ஏற்பட்டது.
- அவரது மனைவி, குழந்தையை கட்டையால் தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள புன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் கங்கப்பா (வயது45). அதே பகுதியில் உள்ள ஸ்ரீராம் (வயது 52). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 வருடத்திற்கு முன்பு விநாயகர் சதுர்த்தி அன்று பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் முன்விரோதம் காரணமாக கடந்த 6-ந் தேதி ஸ்ரீராம் தரப்பில் அஞ்சப்பா (43), ரமேஷ் (40), பாலகிருஷ்ணன் (29), சீனிவாசன் மற்றும் 5 பேரும், கங்கப்பா வீட்டிற்கு சென்று அவரது மனைவி, குழந்தையை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனர்.
- இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக பிரபாவதியை, வெங்கடேஷ் தாக்கினார்.
- புகாரின் பேரில் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள அகல கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாவதி (வயது28). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (28).
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட நிலத்தகராறு காரணமாக பிரபாவதியை, வெங்கடேஷ் தாக்கினார். இதில் காயமடைந்த பிரபாவதி தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷ், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டது
- இதில் மணி ராஜாவை கட்டையால் தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள நோரல குட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது39). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் மணி (57). கூலி தொழிலாளி.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மது அருந்தி கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டது. இதில் மணி ராஜாவை கட்டையால் தாக்கினார். இதில் காயமடைந்த ராஜா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது.
இது குறித்து பர்கூர் போலீசார் மணியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- வயிற்று வலி ஏற்பட்டதால் மன விரக்கியில் இருந்து வந்துள்ளார்.
- அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சுகர்ணஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 20). இவர் ஓசூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பவித்ரா எலி மருந்து குடித்ததால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பவித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திம்மாபுரம் அருகே உள்ள ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது45). ஆட்டோ டிரைவர். குடிப்பழக்கத்தினால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மனவிரக்தியில் இருந்த சசிகுமார் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஜா கடை அருகே உள்ள காட்டிநாயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது75). இவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாராஜா கடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என அறவுறித்தினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவை கல்லூரியின் தாளாளர் சி.பெருமாள், கல்லூரியின் தலைவர் வள்ளி பெருமாள் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தொடக்க உரையாற்றி ஆண்டறிக்கை படித்தார். விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தாளாளர் பேசும் போது கிராமப்புற மாணவர்கள் இன்று தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பயன்படுத்தி நன்கு கல்வி கற்று, வளாக தேர்வில் தேர்வாகி வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்றார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பேசும் போது ஒழுக்கம், அறம், நற்சிந்தனை, நன்னடத்தை, விளையாட்டு, விவசாயம் அனைத்தும் கல்வி தான். அதிலும் நாம் தேர்ச்சி பெற வேண்டும். இனத்தின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்தது தாய்மொழி. அது நமது உயிர், உணர்வாகும். மாணவ, மாணவிகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த பணிகளில் அமர வேண்டும் என்றார். இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்கலைக்கழக அளவில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். இதில் சிறப்பாக பணிபுரிந்த பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், அனைவருக்கும் சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாகனத்தின் டேஸ்போர்டில் பறவை கூடு கட்டி இருந்தது..
- இருசக்கர வாகனத்தை எடுக்காமல் அப்படியே, அங்கேயே விட்டுவிட்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தோட்டகிரி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் டேவிட்மாறன். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர், தான் பயன்படுத்தி வந்த ஒரு 2 சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு 10 நாட்களாக பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்தார். அதன் பின்பு அந்த வாகனத்தை அவர் எடுக்க முற்பட்டபோது, இருசக்கர வாகனத்தின் முன் பகுதி டேஸ்போர்டில் பறவை ஒன்று கூடு கட்டி இருப்பதை பார்த்தார்.
இதையடுத்து சற்றும் யோசிக்காத டேவிட்மாறன் பறவை கூடு கட்டி வாழ்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்காமல் அப்படியே, அங்கேயே விட்டுவிட்டார்.
கடந்த 2 மாதங்களாக அந்த வாகனத்தை அவர் எடுக்காமல் வீட்டில் முன்பு நிறுத்தி இருந்தார். தற்போது அவரது இரு சக்கர வாகனத்தில் ஊர் குருவி முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளது.
கீச் கீச் என சத்தமிடும் அந்த குஞ்சுகளும்,அதன் தாயும் வசிப்பதற்காக அந்த வாகனத்தை அப்படியே விட்டு விட்டார்.
குஞ்சுகள் பெரிதாகி தாய் பறவையுடன் அங்கிருந்து சென்ற பிறகு தனது வாகனத்தை பயன்படுத்த அவர் முடிவு செய்துள்ளார். இவரது செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
- தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
- கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. கோபுரம் மற்றும் பிரகாரம் மகா மண்டபம் சுற்று சுவர்கள் சிதிலமடைந்துள்ளது.
தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. கோவில் பக்தர்கள் ஆன்மீகப் பெரியவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் மல்லிகா தலைமை தாங்கி கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, சுப்ரமணிய சுவாமி ேகாவில் தர்மகர்த்தா மாதேஸ்வரன் தீபக், விஏஓ மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






