என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரையில் கோவில் புனரமைப்பு பணி கலந்தாய்வு கூட்டம்
- தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
- கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவில் தற்பொழுது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. கோபுரம் மற்றும் பிரகாரம் மகா மண்டபம் சுற்று சுவர்கள் சிதிலமடைந்துள்ளது.
தற்பொழுது தமிழ்நாடு அரசு கோவிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. கோவில் பக்தர்கள் ஆன்மீகப் பெரியவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் மல்லிகா தலைமை தாங்கி கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, சுப்ரமணிய சுவாமி ேகாவில் தர்மகர்த்தா மாதேஸ்வரன் தீபக், விஏஓ மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






